கேரள மருத்துவ கழிவுகளால் சுற்றுச்சூழல் சீர்கேடு
கேரளாவில் இருந்து கொண்டு வரப்படும் மருத்துவ கழிவுகளை சங்கரன்கோவில் அருகே எரிப்பதால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுவதுடன் அப்பகுதியில் வசிப்பவர்களுக்கு தொற்று நோய் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன.
கேரளாவில் இருந்து கொண்டு வரப்படும் மருத்துவக் கழிவுகளை தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியில் உள்ள கிராமங்களில் கொட்டி எரிக்கப்படுவது தொடர்ந்து நடந்து வருகிறது. இதனால், அப்பகுதி பொதுமக்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்படும் அபாயமும், தோற்று நோய் ஏற்படும் அபாயமும் உள்ளது.
கேரளாவில் இருந்து தமிழக எல்லையைத் தாண்டி மருத்துவக் கழிவுகள் லாரி மூலமாக கொண்டு வரப்படுகிறது. குறிப்பாக சங்கரன்கோவில் பகுதியில் கொட்டப்பட்டு எரிக்கப்படுகின்றன. இதனால் இப்பகுதி மக்களுக்கு நோய் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கேரளாவில் இருந்து தமிழ்நாட்டுக்கு வரும் வாகனங்கள் சோதனைச் சாவடிகளை தாண்டியே வருகின்றன. சோதனை செய்யாமல் வாகனங்களை அனுப்புவதால் கேரள வாகன ஓட்டுனர்கள் தைரியமாக மருத்துவ கழிவுகளை கொட்டி எரிக்கின்றனர்.சோதனை செய்து அனுப்ப வேண்டிய சோதனைச்சாவடிகள் கண்டு கொள்ளாமல் இருப்பதனால் தொடர்ந்து இது நடப்பதாக அப்பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இதற்கு, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து, சோதனை சாவடிகளில் கடுமையான சோதனைகளை செய்ய உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu