ம.தி.மு.க. தலைமை கழக செயலாளர் துரை வைகோ விற்கு சொந்த ஊரில் வரவேற்பு
சங்கரன் கோவிலில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் துரை வைகோ.
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைமைக் கழகச் செயலாளராக அறிவிக்கப்பட்ட துரை வைகோ இன்று அவரது சொந்த ஊரான சங்கரன் கோயிலுக்கு வருகை தந்தார். அங்கு அவருக்கு மேளதாளத்துடன் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. அதன்பின் அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
காலத்தின் கட்டாயத்தினால் அரசியலுக்கு வந்துள்ளேன். கடந்த இரண்டரை வருடமாக நான் கடுமையான மன அழுத்தத்தில் இருந்தேன். தொண்டர்கள், இயக்க நிர்வாகிகளின் வேண்டுகோளுக்கு இணங்கவே அரசியலுக்கு வந்துள்ளேன். வாரிசு அரசியல் என்பது திணிக்கப்படுகின்றன ஒன்று .அது தான் எதிர்க்கிறோம் .ஆனால் ம.தி.மு.க என்ற குடும்பத்தின் ஒருமித்த கருத்து இருந்ததினால் நான் நியமிக்கப்பட்டுள்ளேன்.
தலைமை கழக செயலாளர் என்ற பதவி அதிகாரமிக்க பதவி அல்ல. நியமன பதவிதான். மக்களுக்கு பணியாற்ற அரசியல் அதிகாரம் தேவை என்று நினைப்பவன் நான் .அதனால் தேர்தலில் கண்டிப்பாக போட்டியிடுவேன். அரசியல் என்பது முட்கள் நிறைந்த பாதை என்பது எனக்கு தெரியும். என் அப்பாவின் போராட்ட குணத்தினால் அவர் மீது போடப்பட்ட வழக்குகளால் எங்கள் குடும்பத்தினருக்கு ஏற்பட்ட வலிகள் ஏராளம். அதை விவரிக்க முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu