சங்கரன்கோவில் அருகே மதிமுக வேட்பாளர்கள் கலந்தாய்வு கூட்டம்

சங்கரன்கோவில் அருகே மதிமுக வேட்பாளர்கள் கலந்தாய்வு கூட்டம்
X

சங்கரன்கோவில் அருகே கலிங்கப்பட்டி கிராமத்தில் மதிமுக வேட்பாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டத்தில் துரை வைகாே பேசினார்.

சங்கரன்கோவில் அருகே கலிங்கப்பட்டி கிராமத்தில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் மதிமுக வேட்பாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம்.

சங்கரன்கோவில் அருகே நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், நெல்லை மாவட்டங்களின் ம.தி.மு.க. வேட்பாளர்கள் கலந்தாய்வுக் கூட்டத்தில் தமிழக அரசு தேர்தல் வாக்குறுதிகள் 75 சதவீதம் நிறைவேற்றியுள்ளதாக மதிமுக தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ பேட்டி.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள கலிங்கப்பட்டி கிராமத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் இல்லத்தில் மதிமுக சார்பில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர், தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த வேட்பாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் மதிமுக தலைமை நிலைய செயலாளர் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் ம.தி.மு.க., தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ கலந்து கொண்டு பேசும் போது, உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற மக்களின் நம்பிக்கையைப் பெற வேண்டும். நமது கருத்துக்கள் மக்களைச் சென்றடைய வேண்டும். எதிர் அணியினர் பொய் பிரச்சாரங்களை செய்து வருகின்றனர். தி.மு.க., ஆட்சிக்கு வந்து 8 மாதத்தில் 75 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றி இருக்கிறது.

கடந்த 10 வருட அ.தி.மு.க., ஆட்சியில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. அ.தி.மு.க., ஆட்சியில் உள்ளாட்சித் தேர்தலை நடத்தவில்லை. கடந்த 5 வருடம் உள்ளாட்சி அமைப்புகளில் எந்த பணிகளும் நடக்கவில்லை. இதனால் மத்திய அரசிடம் இருந்து வர வேண்டிய 2 ஆயிரத்து 507 கோடி ரூபாய் நிதி வரவில்லை. இதற்கு பா.ஜ.க., துணை போயிருக்கிறது. தற்போது சமூக வலைதளங்களில் தான் அரசியல் நடக்கிறது.

அதனால் நீங்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்த வேண்டும். ஊரடங்கு காரணமாக பலருக்கு வேலைவாய்ப்பு போய் விட்டது. வேலைவாய்ப்பு இல்லாததாலும், கடன் தொல்லை காரணமாகவும் நாட்டில் 25 ஆயிரம் பேர் தற்கொலை செய்திருக்கிறார்கள். நாட்டை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வது தான் அரசின் கடமை. ஜாதி, மத அமைப்புகளை தூண்டும் வலதுசாரி அமைப்புகளை புறக்கணிக்க வேண்டும். என் நாடு, எனது உடை, எனது உரிமைகளில் தலையிடுவதற்கு யாருக்கும் உரிமையில்லை. நீட் பிரச்சினையில் தவறான தகவல்களை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறி வருகிறார்.

மருத்துவ படிப்பில் 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு காரணமாகத்தான் அரசு பள்ளி மாணவர்களுக்கு இடம் கிடைத்துள்ளது. பா.ஜ.க., ஆளும் மாநிலத்தில் உள் ஒதுக்கீடு இருக்கிறதா. இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் மட்டும் தான் உள்ஒதுக்கீடு இருக்கிறது. இதைப் பார்த்துதான் தற்போது ஒடிசா மாநிலத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 15 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கி இருக்கிறார்கள்.

நாமக்கல்லில் மட்டும் ஒரு நீட் கோச்சிங் சென்டர் கடந்த ஆண்டு 150 கோடி வருமானம் ஈட்டியுள்ளது. இதேபோல் தமிழகம் முழுவதும் 1000 கோடிக்கு மேல் வருமானம் ஈட்டியுள்ளது.அப்படியானால் நீட் கோசிங் சென்டருக்கு பாஜக ஆதரவாக இருக்கிறதா இவ்வாறு அவர் கூறினார்.

Tags

Next Story
டெல்லி டூ அமெரிக்கா அரை மணி நேரத்துலயா? என்னப்பா சொல்ற எலான் மஸ்க்..! | Delhi to America Flight Timings