தண்ணீர்தொட்டிக்குள் ஆண் சடலம் கண்டெடுப்பு

தண்ணீர்தொட்டிக்குள் ஆண் சடலம் கண்டெடுப்பு
X

சங்கரன்கோவில் அருகே தண்ணீர் தொட்டிக்குள் அழுகிய நிலையில் ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்டது.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள கரடிகுளம் பகுதியை சேர்ந்த ஐயப்பன் மகன் மாடசாமி (60). இவர் சற்று மனநிலை பாதிக்கபட்டவர் என தெரிகிறது. இந்நிலையில் மீன்துள்ளி கிராமத்திற்கு அவரது உறவினர் இல்ல நிகழ்ச்சிக்க அவரது பேத்தி சாந்தியை அழைத்து சென்று உள்ளார்.சென்ற இடத்தில் அவர் காணாமல் போய் நான்கு நாட்களாக அவரது உறவினர்கள் தேடி வந்த நிலையில் நிகழ்ச்சி நடந்த வீட்டின் அருகே உள்ள பயன்படுத்தபடாத தண்ணீர் தொட்டிக்குள் அழுகிய நிலையில் பிணமாக கிடந்து உள்ளார்.இச்சம்பவம் குறித்து அறிந்து அங்கு வந்த பனவடலிசத்திரம் போலீசார் இறந்தவர் உடலை மீட்டு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story