சங்கரன்கோவில் திரௌபதி அம்மன் கோவிலில் கும்பாபிஷேகம்

சங்கரன்கோவில் திரௌபதி அம்மன் கோவிலில் கும்பாபிஷேகம்
X

.தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் உள்ள திரௌபதி அம்மன் திருக்கோவிலில் 12ஆண்டுகளுக்கு பிறகு மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. கும்பாபிஷேக நிகழ்ச்சியின் முக்கிய நிகழ்ச்சியான காலை வேத விற்பன்னர்கள் வேத மந்திரம் முழங்க யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. இதனை தொடர்ந்து கோபுர கலசத்தில் பல்வேறு விதமான பூஜைகளுடன் வேத வாத்தியங்கள் முழுங்க புனித நீர் தெளிக்கப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. பின்னர் அந்த புனித நீரை பக்தர்களின் தலையில் தெளித்தனர். இதில் ஆயிரகணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

திரௌபதி அம்மன் திருக்கோவில் கும்பாபிஷேக விழாவில் சங்கரன்கோவில் சட்டமன்ற அதிமுக வேட்பாளரும் அமைச்சருமான இராஜலெட்சுமி, திமுக வேட்பாளர் ராஜா ஆகியோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்

Tags

Next Story
ai as the future