/* */

மேலநீலிதநல்லூர் ஒன்றிய பெருந்தலைவராக திமுகவை சேர்ந்த மாதவி தேர்வு

மேலநீலிதநல்லூர் ஒன்றிய பெருந்தலைவராக திமுகவை சேர்ந்த மாதவி தேர்வு செய்யப்பட்டார்.

HIGHLIGHTS

மேலநீலிதநல்லூர் ஒன்றிய பெருந்தலைவராக திமுகவை சேர்ந்த மாதவி தேர்வு
X
மேலநீலிதநல்லூர் ஒன்றிய சேர்மேனாக தேர்வு செய்யப்பட்ட மாதவி

தென்காசி மாவட்டம் மேலநீலிதநல்லூர் ஊராட்சி ஒன்றியத்தில் 12 ஒன்றிய கவுன்சிலர்கள் பதவி உள்ளது. இதில் திமுக எட்டு இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஒன்றியக்குழு தலைவர் பதவியை பிடிக்கிறது .நான்கு பேர் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர்.

1வது வார்டில் சுந்தரி, இரண்டாவது வார்டில் முருகன், 3வது வார்டில் முத்துமாரி, 5 வது வார்டில் அருள் சீலி, 6வது வார்டில் வேல்மயில், 7வது வார்டில் பாரதிகண்ணன், 9வது வார்டில் மாதவி, 10வது வார்டு அமுதா, 12 வது வார்டில் பிரேமா ஆகியோர் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றனர்.

நாலாவது வார்டில் கணேசன், 8வது வார்டில் ராமலட்சுமி, பத்தாவது வாரத்தில் அமுதா 11வது வார்டு சுஜிதா ஆகியோர் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்று உள்ளனர். இவர்கள் அனைவரும் கடந்த 20ம் தேதி ஒன்றிய கவுன்சிலர்களாக பதவி ஏற்றுக் கொண்டனர்.

இன்று காலை பரபரபபான சூழ்நிலையில் சேர்மேன் தேர்தல் நடைபெற்றது. இதில் திமுகவைச் சேர்ந்த 9வது வார்டு கவுன்சிலர் மாதவி, அதே திமுகவைச் சேர்ந்த 3வது வார்டு கவன்சிலர் முத்துமாரி போட்டியிட்டனர்.இதில் மாதவி 8 வாக்குகளை பெற்றார். முத்துமாரி 4 வாக்குகளை பெற்றார். நான்கு வாக்குகள் வித்தியாசத்தில் மாதவி வெற்றிப் பெற்று சேர்மேன் ஆனார்.

Updated On: 22 Oct 2021 10:30 AM GMT

Related News

Latest News

  1. பல்லடம்
    பல்லடத்தில் வெட்டப்பட்ட மரங்கள்; இயற்கை ஆர்வலர்கள் வேதனை
  2. லைஃப்ஸ்டைல்
    அப்பாவுக்கான பிறந்தநாள் வாழ்த்துகள் :
  3. லைஃப்ஸ்டைல்
    சர்வாதிகாரி என்ற வார்த்தையை உச்சரித்தாலே நினைவில் வரும் ஹிட்லர்
  4. லைஃப்ஸ்டைல்
    உழைக்கும் தோழர்களுக்கு ஒரு சல்யூட்..!
  5. குமாரபாளையம்
    சர்வ சக்தி மாரியம்மன் திருவிழா
  6. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...
  7. தமிழ்நாடு
    புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு
  8. கல்வி
    சென்னை சிப்பெட் வழங்கும் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகள்: மாணவர் சேர்க்கை...
  9. லைஃப்ஸ்டைல்
    கஷ்டம் வரும்போது சிரிங்க..! துன்பம் தூசியாகும்..!
  10. வீடியோ
    Adani துறைமுகத்துல போதைப்பொருள் இருந்துச்சு என்ன நடவடிக்கை எடுத்தாங்க...