சங்கரன்கோவில் அருகே குறைந்த விலையில் குளம் ஏலம்: வீடியாே வெளியானதால் பரபரப்பு

சங்கரன்கோவில் அருகே குறைந்த விலையில் குளம் ஏலம்: வீடியாே வெளியானதால் பரபரப்பு
X

வடநத்தம்பட்டி கிராமத்தை சேர்ந்த விவசாயிகளால் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்.

சங்கரன்கோவில் அருகே நீர்பாசன கமிட்டி என்ற பெயரில் விவசாயிகள் அரசு உத்தரவு இல்லாமல் ஏலம் விடப்பட்ட வீடியோ வெளியாகி பரபரப்பு

சங்கரன்கோவில் அருகே ஐம்பது இலட்சம் ரூபாய் குத்தகைக்கு விட வேண்டிய குளத்தை நீர்பாசன கமிட்டி என்ற பெயரில் விவசாயிகள் அரசு உத்தரவு இல்லாமல் ஒன்பது இலட்சம் ரூபாய்க்கு ஏலம் விடப்பட்ட வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் இந்தாண்டு போதிய அளவை விட அதிகளவில் வடகிழக்கு பருவமழை பெய்ததனால் அனைத்து குளங்களும் நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இதனைதொடர்ந்து சங்கரன்கோவில் அருகே உள்ள வீரசிகாமனி, வடநத்தம்பட்டி பெரிய குளமானது ஐந்து கிலோ மீட்டர் தொலைவிற்கு மிகுந்த ஆழமான மிகப்பெரிய பரப்பளவு கொண்ட குளம் ஆகும். இந்த குளத்தில் இருந்து இருபதுக்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள ஆயிரகண்கான விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றது.

வீரசிகாமனி பெரியகுளமானது தமிழகஅரசின் பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. அதனால் அதிகாரிகள் வருகிற வியழக்கிழமை மீன் குத்தகைக்கு ஏலம் விடுவதற்கு அறிவிப்பு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதனையும் பொருட்படுத்தாமல் வடநத்தம்பட்டி, வீரசிகாமனி கிரமத்தை சேர்ந்த விவசாயிகள் நீர்பாசன கமிட்டி என்ற பெயரில் வீரசிகாமனி கிராமத்தில் உள்ள இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான ராஜகோபாலமன்னர் சுவாமி திருக்கோவில் உள்ளே விவசாயிகள் மீன்குத்தகை ஏலம் விடுவது சம்பந்தமாக பேசி வடநத்தம்பட்டி கிராமத்தை சேர்ந்த நபருக்கு ஒன்பது இலட்சம் ரூபாய் என பேசி முடிவு செய்து வந்திருந்த அனைவரும் தீர்மானமாக நிறைவேற்றியுள்ளனர். அதனால் அரசு ஏலத்தில் யாரும் பங்கு பெறக்கூடாது எனவும் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது

தமிழகஅரசின் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான பெரியகுளத்தை விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் நீர்பாசன கமிட்டி என்ற பெயரில் யாரையும் மீன் குத்தகை ஏலம் எடுக்கவிடாமல் விவசாயிகள் மிரட்டி வருவதாக குற்றசாட்டு எழுந்துள்ளது. ஐம்பது இலட்சம் முதல் ஒரு கோடி வரை மீன் குத்தகை ஏலம் போக வேண்டிய பெரிய குளத்தை ஒன்பது இலட்சம் என தீர்மானம் நிறைவேற்றி கூட்டம் நடத்திய வீடியோ தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக வடநத்தம்பட்டியை சேர்ந்த சிவக்குமார் என்பவர் அரசுக்கு சொந்தமான குளத்தை நீர்பாசன கமிட்டி என்ற பெயரில் விவசாயிகள் ஏலம் விட்டு யாரையும் பங்குகொள்ள கூடாது என மிரட்டி வருகின்றனர். மேலும் அரசுக்கு ஐம்பது இலட்சம் ரூபாய் முதல் ஒரு கோடி வரை வருமான இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே அரசுக்கு சொந்தமான குளத்தை ஒன்பது இலட்சத்திற்கும் ஏலம் விட்ட விவசாயிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட கண்காணிப்பாள் அலுவலகத்திற்கு புகார் மனுவையும் அனுப்பியுள்ளார்.

எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு நேர்மையான முறையில் வீரசிகாமனி பெரிகுளம் மீன் குத்தகை ஏலம் விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாகும்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!