மதிமுக முன்னாள் யூனியன் சேர்மனை தாக்கிய லாரி டிரைவர் கைது

மதிமுக முன்னாள் யூனியன் சேர்மனை தாக்கிய லாரி டிரைவர் கைது
X

பைல் படம்.

குருவிகுளத்தில் மதிமுக முன்னாள் யூனியன் சேர்மனை தாக்கிய லாரி டிரைவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தென்காசி மாவட்டம் குருவிகுளத்தை சேர்ந்தவர் பெரியகிருஷ்ணன் (78) மதிமுக முன்னாள் யூனியன் சேர்மன். அதே பகுதியை சேர்ந்தவர் மணி மகன் ஐயப்பன்(45) லாரி டிரைவர். சமீபத்தில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் பெரியகிருஷ்ணனுக்கும், ஐயப்பனுக்கும் இடையே முன் விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் பெரியகிருஷ்ணனை, லாரி டிரைவர் ஐயப்பன் கம்பால் தாக்கியதாக கூறப்படுகிறது. இது குறித்த புகாரின்பேரில் குருவிகுளம் போலீசார் வழக்குபதிவு செய்து ஐயப்பனை கைது செய்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!