உள்ளாட்சி தேர்தல்: சங்கரன்காேவிலில் பலத்த பாதுகாப்புடன் 2ம் கட்ட வாக்குப்பதிவு

உள்ளாட்சி தேர்தல்: சங்கரன்காேவிலில் பலத்த பாதுகாப்புடன் 2ம் கட்ட வாக்குப்பதிவு
X

சங்கரன்கோவில், குருவிகுளம் ஊராட்சி ஒன்றியங்களில் 2ம் கட்ட வாக்குப்பதிவு போலீசாரின் பலத்த பாதுகாப்புடன் நடைபெற்று வருகிறது.

சங்கரன்கோவில், குருவிகுளம் ஊராட்சி ஒன்றியங்களில் 2ம் கட்ட வாக்குப்பதிவு போலீசாரின் பலத்த பாதுகாப்புடன் நடைபெற்று வருகிறது.

சங்கரன்கோவில், குருவிகுளம் ஆகிய இரண்டு ஊராட்சி ஒன்றியங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு 343 வாக்கு சாவடி மையங்களில் நான்கு டிஎஸ்பிக்கள் தலைமையில் 2500 காவல்துறையினரின் பலத்த பாதுகாப்புடன் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

தென்காசி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு சங்கரன்கோவில், குருவிகுளம், கடையநல்லூர், தென்காசி, கடையநல்லூர் ஆகிய ஐந்து ஊராட்சி ஒன்றியங்களில் காலியாக உள்ள ஆறு மாவட்ட ஊராட்சி உறுப்பினர், அறுபது ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், 98 கிராம ஊராட்சி தலைவர், 655கிராம வார்டு உறுப்பினர் பதவியிடங்கள் உட்பட 819பதவிகளுக்கு நடைபெற்று வருகிறது. இதில் 2742வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

ஐந்து ஊராட்சி ஒன்றியங்களில் 574வாக்கு சாவடி மையங்களில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இதற்காக 4630 பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். மேலும் பதட்டமான வாக்குசாவடி மையங்களில் அதிகளில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் காவல்துறையினர் சிறப்பு அதிரடிப்படையினர், மற்றும் ரோந்து வாகனங்களில் காவல்துறையினர் அனைத்து வாக்கு சாவடி மையங்களையும் கண்காணித்து வருகின்றனர். மேலும் அனைத்து வாக்கு சவாடி மையங்களிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.

சங்கரன்கோவில் ஊராட்சி ஒன்றியத்தில் காலியாக உள்ள 28பஞ்சாயத்து தலைவர், 17ஒன்றிய கவுன்சிலர், ஒரு மாவட்ட கவுன்சிலர், 509 வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கு 163 வாக்கு சாவடி மையங்களில் வாக்குப்பதிவு காவல்துறையினரின் பாதுகாப்போடு நடைபெற்று வருகிறது. மேலும் பதட்டமான வாக்குசாவடி மையங்களில் அதிகளவில் காவல்துறையினர் குவிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதே போல் குருவிகுளம் ஊரட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் காலியாக உள்ள 39பஞ்சாயத்து தலைவர், 17ஒன்றிய கவுன்சிலர், இரண்டு மாவட்ட கவுன்சிலர், 294வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கு 180வாக்கு சாவடி மையங்களில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இரண்டு ஊராட்சி ஒன்றியங்களில் இரண்டு கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், நான்கு டிஎஸ்பிக்கள் தலைமையில் 2500காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Next Story
AI Tools Like ChatGPT - உங்களின் வேலைகளை எளிதாக்கும் மிகச் சிறந்த கருவி! நீங்களும் Try பனி பாருங்க Friends!