உள்ளாட்சி தேர்தல் வெற்றி: சங்கரன்கோவிலில் திமுகவினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

உள்ளாட்சி தேர்தல் வெற்றி: சங்கரன்கோவிலில் திமுகவினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
X

ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்றதையடுத்து சங்கரன்கோவிலில் எம்எல்ஏ தலைமையில் இனிப்புகள் வழங்கி திமுகவினர் கொண்டாட்டம்.

ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்றதையடுத்து சங்கரன்கோவிலில் எம்எல்ஏ தலைமையில் இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்.

ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்றதை கொண்டாடும் விதமாக சங்கரன்கோவிலில் பட்டாசுகள் வெடித்து இனிப்புகள் வழங்கி சட்டமன்ற உறுப்பினர் தலைமையில் திமுகவினர் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்

மாநில அளவிலான வலுதூக்கும் போட்டியில் வெற்றி பெற்ற சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் திரு ராஜா அவர்களை வரவேற்கும் விதமாகவும் மாநில அளவில் ஒன்பது மாவட்டங்களிலும் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் மாபெரும் வெற்றிக்கு வித்திட்ட தலைவர் தளபதியார் அவர்களின் வெற்றியை கொண்டாடும் விதமாகவும் இன்று சங்கரன்கோவில் பேருந்து நிலையம் எதிரில் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்கள்.

இந்நிகழ்வில் சங்கரன்கோவில் நகர கழக செயலாளர் சங்கரன்,ஆதிதிராவிடர் நலக்குழு மாவட்ட செயலாளர் சங்கர நாராயணன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ராஜதுரை, முன்னாள் அறங்காவலர் முப்பிடாதி, கே எஸ் சண்முகராஜ், ராமகிருஷ்ணன், மாவட்ட மகளிரணி சுப்புத்தாய், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் அப்பாஸ் அலி, ராயல் கார்த்தி, வழக்கறிஞர் சதீஷ் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது