மின்னல் தாக்கி மாடுகள் உயிரிழப்பு

மின்னல் தாக்கி மாடுகள் உயிரிழப்பு
X
சங்கரன்கோவில் அருகே மின்னல் தாக்கி இரண்டு பசு மாடுகள் பலி

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள குவளைக் கண்ணி கிராமத்தைச் சேர்ந்த பூச்சி. இவர் விவசாயம் செய்தும் பசு மாடுகளை வைத்து பால் வியாபாரம் செய்து வாழ்ந்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று இடி மின்னலுடன் பெய்த மழையின் போது மின்னல் தாக்கி இரண்டு பசு மாடுகளும் உயிரிழந்து..மேலும் அருகில் இருந்த அவருடைய பேத்தி விஜயலட்சுமி மீது மின்னல் தாக்கி லேசான தீக்காயம் ஏற்பட்டது.

குடும்பத்தின் வாழ்வாதாரமாக இருந்த பசு இறந்ததால், அரசு அதற்கு உரிய நிவாரணத்தை வழங்கும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தனது குடும்பத்தில் ஒருவராக வளர்ந்து வந்த பசு மாடுகள் இறந்த சம்பவம் அக் குடும்பத்தில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது..

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!