தோட்டத்தில் எலுமிச்சை பழங்களை திருடியவர் கைது

தோட்டத்தில் எலுமிச்சை பழங்களை திருடியவர் கைது
X

திருவேங்கடம் அருகே தோட்டத்திலிருந்து எலுமிச்சை பழங்களை திருடிய நபர் கைது செய்யப்பட்டார்.

தென்காசி மாவட்டம், திருவேங்கடம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ராஜூ என்பவருக்கு சொந்தமான எலுமிச்சை தோட்டத்தில் குறிச்சாங்குளத்தை சேர்ந்த சங்கர்(45) என்பவர் வேலை செய்து வருகிறார். வழக்கம் போல் சந்தைக்கு எலுமிச்சை பழங்களை அனுப்புவதற்காக சுமார் 43 கிலோ எடையுள்ள பழங்களை பறித்து தோட்டத்தில் வைத்திருந்த போது, அங்கு டிராக்டரில் வந்த நபர் எலுமிச்சை பழங்களை திருடிச் செல்ல முயன்றுள்ளார்.

இதுகுறித்து சங்கர் திருவேங்கடம் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி மேற்படி எலுமிச்சை பழங்களை திருடிய மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த பாலையா என்பவனின் மகன் எட்வர்ட்(38) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தார்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!