குருவிகுளத்தில் அதிமுக, அமுமுகவைச் சார்ந்த 200 பேர் திமுகவில் இணைந்தனர்

குருவிகுளத்தில் அதிமுக, அமுமுகவைச் சார்ந்த 200 பேர் திமுகவில் இணைந்தனர்
X
சங்கரன்கோவில் அருகே திமுக புதிய அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது. அதில் 200 பேர் திமுகவில் இணைந்தனர்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே குருவிகுளத்தில் தெற்கு ஒன்றியம் திமுக,சார்பில் புதிய அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது. அதில் அதிமுக மற்றும் அமமுக -வை சேர்ந்த 200 பேர் திமுகவில் இணைந்தனர்.

குருவிகுளத்திற்கு வருகை தந்த தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் வழக்கறிஞர் பொ.சிவபத்மநாதனுக்கு குருவிகுளம் தெற்கு ஒன்றிய செயலாளர் கடற்கரை தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து குருவிகுளம் தெற்கு ஒன்றிய புதிய அலுவலகத்தை வழக்கறிஞர் பொ.சிவபத்மநாதன் திறந்து வைத்தார்.

தொடர்ந்து நடைபெற்ற விழாவில் அதிமுக மற்றும் அமமுகவைச் சேர்ந்த சுமார் 100 பெண்கள் உள்பட 200 பேர் திராவிட முன்னேற்றக் கழக மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் பொ.சிவபத்மநாதன் முன்னிலையில் இணைந்தனர். இந்த நிகழ்ச்சியில் திமுக ஒன்றிய செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.



Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!