குருவிகுளம் பகுதியில் அதிமுக சார்பில் தீவிர வாக்கு சேகரிப்பு

குருவிகுளம் பகுதியில் அதிமுக சார்பில் தீவிர வாக்கு சேகரிப்பு
X

குருவிகுளம் பகுதியில், பிரசாரத்தில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் ராஜலட்சுமி.

குருவிகுளம் பகுதியில், அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து, முன்னாள் அமைச்சர் ராஜலட்சுமி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்டது குருவிகுளம் ஒன்றியம். இங்கு உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக சார்பில் மாவட்ட கவுன்சிலர் வேட்பாளராக அமுதா_பாலசுப்பிரமணியம் போட்டியிடுகிறார். குருவிகுளம் 7வது வார்டு ஒன்றியக் கவுன்சிலர் பதவிக்குப் போட்டியிடும் ஐஸ்வர்யா_வாசுதேவன் ஆகியோர், இரட்டைஇலை சின்னத்தில் போட்டியிடுகின்றனர்.

இவர்களுக்கு ஆதரவாக, இளையரசனேந்தல் கிராம மக்களிடம், முன்னாள் ஆதிதிராவிடர்_மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சரும் அதிமுக மகளிர் அணி துணைச் செயலாளருமான, ராஜலட்சுமி, வாக்கு சேகரித்தார். அவருடன் அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!