முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் நீதி வழங்க வேண்டும்:காங்கிரஸ் நூதன போராட்டம்
தென்காசி மாவட்டம், கோவில்பட்டியில் நூதனப்போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினர்
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நீதி வழங்க வேண்டி கோவில்பட்டியில் காங்கிரஸ் கட்சியினர் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட காங்கிரஸ் முன்னாள் துணை தலைவர் அய்யலுசாமி தலைமையில்,மாவட்ட துணை தலைவர் முத்து,கயத்தாறு ஒன்றிய முன்னாள் தலைவர் செல்லத்துரை,சேவாதள மாவட்ட தலைவர் சக்தி விநாயகம் உள்ளிட்டோர் கருப்பு துணியால் கண், வாய், காதை மூடியபடி, கைகளில் தராசு ஏந்தி, முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நீதி வழங்க வலியுறுத்தி முழக்கமிட்டனர்
.பின்னர் கோட்டாட்சியர் சங்கர நாராயணனிடம் வழங்கிய மனுவில்,
முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கு குற்றவாளிகளுக்கு பரோல் மற்றும் பரோல் நீடிப்பு என்ற பெயரில் சட்ட விதி மீறல்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. இது இந்தியாவில் பெரிய தலைவர்களை கொலை செய்து விட்டு, சாதி, மதம், இனம் என உணர்வை தூண்டிவிட்டு அதன் மூலம் தப்பித்துக் கொள்ள முன் உதாரணமாக அமைந்துவிடும். இதுபோன்ற வாதத்தை தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் பேரறிவாளன் ஜாமீன் மீதான விசாரணையில் தெரிவிக்கவில்லை. எனவே, அரசு தன நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள வேண்டும். இந்தியாவின் இறையாண்மை பாதுகாக்கப்பட வேண்டும். ராஜீவ்காந்தி கொலை வழக்கு குற்றவாளிகள் தூக்கிலிடப்பட வேண்டும். இதற்கு நாடாளுமன்ற இரு அவைகளையும் கூட்டி சிறப்பு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.
உச்சநீதிமன்றம் பேரறிவாளனுக்கு வழங்கி உள்ள ஜாமீனை ரத்து செய்ய மறுஆய்வு மனு தாக்க செய்ய வேண்டும். மேலும், இந்தியாவில் நடைபெறும் ஒவ்வொரு கொலைக்கும் தூக்கு தண்டனை வழங்க வேண்டும். தமிழகத்தில் கடந்த 20 ஆண்டுகளில் நடைபெற்ற கொலை வழக்கு பதிவு, அதற்கு தண்டனை பெற்று தந்த விகிதம் குறித்து முதல்வர் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என தெரிவித்திருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu