கள்ளக்குறிச்சி மாணவி இறப்பு: சமூக வலைதளங்களில் தவறாக பதிவிட்ட நபர் கைது

கள்ளக்குறிச்சி மாணவி இறப்பு: சமூக வலைதளங்களில் தவறாக பதிவிட்ட நபர் கைது
X

பைல் படம்.

ஜாதி வன்முறைகளை தூண்டும் வகையிலும் வாட்ஸ் அப் மூலமாக பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் ஆடியோ வெளியிட்ட நபர் கைது.

தென்காசி மாவட்டம்,சின்ன கோவிலாங்குளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குருக்கள் பட்டியில் வசித்து வரும் சண்முகசுந்தரம் என்பவரின் மகன் ரமேஷ் கண்ணன் (27). இவர் கள்ளக்குறிச்சியில் பள்ளி மாணவி இறப்பு தொடர்பாக அங்கு கலவரம் நடந்தது போலவே தென் மாவட்டங்களிலும், மக்கள் அரசு சொத்துக்களை சேதப்படுத்த வேண்டும் என்ற வகையிலும், ஜாதி வன்முறைகளை தூண்டும் வகையிலும் வாட்ஸ் அப் மூலமாக பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் ஆடியோ வெளியிட்டுள்ளார். இதுகுறித்து மேற்படி நபர் மீது காவல் ஆய்வாளர் மாதவன் வழக்கு பதிவு செய்து கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தார். இதுபோல் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் சமூக வலைதளங்களில் பதிவிடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!