கோவில்பட்டி நகராட்சியில் அதிமுக வெற்றி பெற்றால்.. கடம்பூர் ராஜூ உறுதி
கோவில்பட்டி நகராட்சியில் அதிமுக வெற்றி பெற்றால் 3 மாதங்களுக்கு ஒருமுறை மக்கள் கருத்து கூட்டம் நடத்துவோம் என கோவில்பட்டியில் கடம்பூர் ராஜூ உறுதி.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகராட்சிக்கு உட்பட்ட 15-வது வார்டு அதிமுக வேட்பாளர் வசந்தியை ஆதரித்து முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் செ.ராஜூ திறந்த ஜீப்பில் சென்று வாக்காளர்களை சந்தித்து வாக்கு சேகரித்தார்.
பிரசாரத்தில் முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ பேசுகையில், கோவில்பட்டி தினசரி சந்தை சாலையில் நடந்த வாக்கு சேகரிப்பின்போது அவர் பேசுகையில், திமுக அரசு மக்களுக்கு நம்பிக்கை துரோகம் செய்துவிட்டது. தேர்தலின் போது பல்வேறு வாக்குறுதிகளை அளித்துவிட்டு, மக்களை நம்ப வைத்து ஏமாற்றிவிட்டனர். தூத்துக்குடி எம்.பி., கனிமொழி, நான் மக்களை சந்திக்கவில்லை எனக் கூறுகிறார். நான் மக்களோடு மக்களாக இருந்து பணி செய்து வருகிறேன். பின்னர் எப்படி தனியாக மக்களை சந்திப்பது. கடந்த 3 ஆண்டுகளாக கனிமொழி எம்.பி., அவரது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து கோவில்பட்டிக்கு எந்த நிதியும் ஒதுக்கவில்லை.
தமிழ்நாட்டில் உள்ள 100-க்கும் மேற்பட்ட நகராட்சிகளில் கோவில்பட்டி நகராட்சி தான் சிறந்த நகராட்சி என்ற விருதைப் பெறும் அளவுக்கு கடந்த அதிமுக, ஆட்சியில் பணியாற்றினோம். இது கோவில்பட்டி மக்களுக்கு கிடைத்த பெருமை.
கோவில்பட்டி நகராட்சியில் அதிமுக வெற்றி பெற்றவுடன் 3 மாதங்களுக்கு ஒருமுறை மக்கள் கருத்துக் கேட்பு கூட்டம் நடத்துவோம். அவ்வாறு கூட்டம் நடத்தி, பல்வேறு வரியினங்களை உயர்த்துவது குறித்து மக்களிடையே கருத்து கேட்டு தான் முடிவு செய்வோம். நாங்கள் வெற்றி பெற்றவுடன் நகராட்சியில் மக்கள் ஆட்சி தான் நடக்கும். திமுக கையில் நகராட்சி போனால், நகராட்சி பகுதியில் மக்கள் வீடு கட்டினால் திமுகவினர் அது எங்கள் வீடு என்று கூறுவார்கள். மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
பொங்கல் பரிசுத் தொகுப்பை பார்த்து மக்கள் மிகவும் அதிருப்தியில் உள்ளனர். உலகத்தில் எங்கும் இல்லாத அளவுக்கு வெல்லத்தை எங்கு கண்டுபிடித்தார்கள் என்று தெரியவில்லை. அப்படியொரு மண்ட வெல்லத்தை மக்களுக்கு கொடுத்துள்ளனர், என்றார்.
தொடர்ந்து, 20வது வார்டில் அதிமுக கூட்டணியில் இரட்டை சின்னத்தில் போட்டியிடும் பகுதியில் தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர் விக்னேஷை ஆதரித்து, முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்தார். பிரசாரத்தில் மாநில எம்.ஜி.ஆர். இளைஞரணி துணைச் செயலர் சீனிராஜ், மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவி சத்யா, கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் பழனிசாமி, அதிமுக பொதுக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், ஒன்றியச் செயலாளர்கள் அன்புராஜ், அய்யாத்துரைப்பாண்டியன்,அம்மா பேரவை வடக்கு மாவட்டப் பொருளாளர் வேலுமணி, வழக்கறிஞர் அணி மாவட்டச் செயலாளர் சிவபெருமாள், நகரச் செயலாளர் விஜயபாண்டியன்,தமிழ் மாநில காங்கிரஸ் நகர தலைவர் ராஜகோபால், தமிழ் மாநில காங்கிரஸ் வட்டாரத் தலைவர் ஆழ்வார்சாமி, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி நகரச் செயலாளர் மூர்த்தி, மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் நீலகண்டன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் பாலமுருகன், முன்னாள் ஒன்றிய செயலாளர் போடு சாமி, வழக்கறிஞர் பழனிகுமார்,அதிமுக நிர்வாகிகள், கோபி,பழனிக்குமார், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu