கோவில்பட்டி: கடம்பூர் ராஜூ அ.தி.மு.க. நிர்வாகிகளுக்கு பொங்கல் வாழ்த்து

கோவில்பட்டி:  கடம்பூர் ராஜூ அ.தி.மு.க. நிர்வாகிகளுக்கு பொங்கல் வாழ்த்து
X

கட்சி நிர்வாகி ஒருவர் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜுவிற்கு சால்வை அணிவித்தார்.

கோவில்பட்டி அருகே கடம்பூர் ராஜூ அ.தி.மு.க. நிர்வாகிகளுக்கு பொங்கல் வாழ்த்து தெரிவித்தார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள கடம்பூர் சிதம்பரபுரம் இல்லத்தில் முன்னாள் அமைச்சரும், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜூ பொங்கல் மற்றும் மாட்டுப் பொங்கல் வாழ்த்துக்களை கூறினார். நேரில் சென்ற அ.தி.மு.க. நிர்வாகிகள் சால்வை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

நிகழ்ச்சியில் மாவட்ட அம்மா பேரவை பொருளாளர் வேலுமணி,கிழக்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜ், மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் போடு சாமி,மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி இணைச் செயலாளர் செண்பக மூர்த்தி,அம்மா பேரவை நகர செயலாளர் ஆபிரகாம் அய்யாதுரை,முன்னாள் கவுன்சிலர் ஜெமினி என்ற அருணாச்சலம்,வார்டு பிரதிநிதி செந்தில்,தகவல் தொழில்நுட்ப பிரிவு நகர செயலாளர் கவியரசன்,மற்றும் அ.தி.மு.க.நிர்வாகிகள் உறுப்பினர்கள் உடன் இருந்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!