தேசிய ஊடக தினத்தை கொண்டாடிய சங்கரன்கோவில் பத்திரிகையாளர்கள்

தேசிய  ஊடக தினத்தை  கொண்டாடிய சங்கரன்கோவில் பத்திரிகையாளர்கள்
X

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் பத்திரிகையாளர் சங்கம் சார்பில் நடைபெற்ற தேசிய பத்திரிகை தின சிறப்பு ஆலோசனைக்கூட்டம்

மக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை தேவைகளையும் செய்திகள் மூலமாக பெற்றுத் தர பத்திரிகையாளர்கள் பாடுபட வேண்டும்

தேசிய ஊடக தினத்தை முன்னிட்டு சங்கரன்கோவில் பத்திரிக்கையாளர்கள் சங்கம் சார்பில் சிறப்பு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

தென்காசி மாவட்டம் , சங்கரன்கோவில் பத்திரிக்கையாளர்கள் சங்கம் சார்பில் தனியார் தங்கும் விடுதியில் தேசிய ஊடக தின (National Press day) சிறப்பு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இதில், சங்கரன்கோவில் மூத்த பத்திரிகையாளர்கள் ஈஸ்வரமூர்த்தி, ஸ்டீபன், ஆகியோர் கலந்து கொண்டு பத்திரிகைகள் மற்றும் காட்சி ஊடகங்களின் இன்றைய நிலை குறித்து விளக்கிப் பேசினர். தற்போதை சூழ்நிலையில் பத்திரிக்கையாளர்களின் செயல்பாடுகள் எந்த அளவிற்கு உள்ளது. வரும் காலங்களில் பத்திரிக்கையாளர்கள் அனைவரும் ஒற்றுமையாக இருந்து, மக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை தேவைகளையும் செய்திகள் மூலமாக பெற்று தர பாடுபட வேண்டும் என்று அனைவரும் உறுதி எடுத்துக்கொள்ள வேண்டும் என்று கூட்டத்தில் பேசியவர்கள் வலியுறுத்தினர். இதில் சங்கரன்கோவில் பகுதியில் பணிபுரியும் ஒலி, ஒளி, அச்சு ஊடகத்துறையை சேர்ந்த அனைத்து பத்திரிக்கையாளர்களும் கலந்து கொண்டு தங்களுடைய கருத்துகளை பகிர்ந்து கொண்டனர்..

Tags

Next Story
the future of ai in healthcare