திமுக கூட்டணி கட்சி வேட்பாளர்கள் அறிமுக கூட்டம்: கனிமொழி எம்பி பங்கேற்பு

திமுக கூட்டணி கட்சி வேட்பாளர்கள் அறிமுக கூட்டம்: கனிமொழி எம்பி பங்கேற்பு
X

சங்கரன்கோவில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் திமுக கூட்டணி கட்சி வேட்பளர்களுக்கான ஆலோசனை கூட்டம் கனிமொழி எம்பி தலைமையில் நடைபெற்றது.

சங்கரன்கோவில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் திமுக கூட்டணி கட்சி வேட்பளர்களுக்கான ஆலோசனை கூட்டம் கனிமொழி தலைமையில் நடைபெற்றது.

சங்கரன்கோவில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் திமுக கூட்டணி கட்சி வேட்பளர்களுக்கான ஆலோசனை கூட்டம் பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி தலைமையில் நடைபெற்றது.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஊராட்சி ஒன்றியங்களான குருவிகுளம், மேலநீலிதநல்லூர், சங்கரன்கோவில் போன்ற பகுதிகளில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியை சேர்ந்த வேட்பாளர்களான ஒன்றிய கவுன்சிலர்கள், மாவட்ட கவுன்சிலர்கள் ஆகியோர்களை அறிமுகம் செய்த தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி பல்வேறு ஆலோசனைகளை வேட்பாளர்களுக்கு வழங்கினார். திமுக ஆட்சி பொறுப்பேற்று நான்கு மாதங்களில் தளபதி ஸ்டாலின் தலைமையிலான அரசு பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறார். நான்கு மாதங்களில் செய்த சாதனை திட்டங்களை பொதுமக்களிடன் எடுத்து கூறி வாக்குகளை பெற்று அமோக வெற்றி பெற செய்ய வேண்டும் என்று வேட்பாளர்கள் மத்தியில் எடுத்துரைத்தார்.

சங்கரன்கோவில் உள்ளாட்சி தேர்தல் அறிமுக கூட்டத்திற்கு வருகை தந்த மாண்புமிகு நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி அவர்களை சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் திரு.ராஜா அவர்கள் வரவேற்று உரையாற்றினார் மேலும் இந்நிகழ்வில் டெல்லி சிறப்பு பிரதிநிதி AKS விஜயன், மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன், நாடாளுமன்ற உறுப்பினர் தனுஷ் குமார், தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனி, முன்னால் நாடாளுமன்ற உறுப்பினர் தங்கவேலு மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள், கழக உடன்பிறப்புகள் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கெண்டனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!