சங்கரன்கோவில் அருகே சுயேச்சை வேட்பாளர் நூதன முறையில் வாக்கு சேகரிப்பு

ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர் தீப்பெட்டி கொடுத்து நூதன முறையில் வாக்கு சேகரித்தார்.

சங்கரன்கோவில் அருகே ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர் தீப்பெட்டி கொடுத்து நூதன முறையில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 11வது வார்டில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர் சந்திரா என்பவருக்கு தீப்பெட்டி சின்னம் ஒதுக்கப்பட்டதால் வடக்குப்புதூர் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்த பின்னர் அப்பகுதியில் உள்ள வாக்காளர்களுக்கு வீடுவீடாக சென்று தீப்பெட்டி வழங்கி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

Tags

Next Story
ai healthcare technology