கடந்த ஆண்டு புதைக்கப்பட்ட பெண்ணின் உடலை தோண்டி மறுஉடற்கூறு ஆய்வு: பரபரப்பு

கடந்த ஆண்டு புதைக்கப்பட்ட பெண்ணின் உடலை  தோண்டி மறுஉடற்கூறு ஆய்வு: பரபரப்பு
X
சங்கரன்கோவில் அருகே கடந்த ஆண்டு புதைக்கப்பட்ட பெண்ணின் உடலை தோண்டி மறு உடற்கூறு ஆய்வு செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள வீரசிகாமனி கிராமத்தை சேர்ந்த கோபிகிருஷ்ணன்-மைதீன்பீவி இருவரும் கடந்த 35ஆண்டுகளுக்கு முன்னர் காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளனர். குழந்தைகள் இல்லை எனவும் கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் மைதீன்பீவி உடல்நலக்குறைவால் திடீரென உயிரழந்துள்ளார். இதனையறிந்த மைதீன்பிவியின் தங்கை பீர்பாத்திமா திருப்பூரில் இருந்து அக்காவின் இறுதி சடங்கிற்கு வந்துள்ளார். மைதீன்பீவின் உடலில் பல்வேறு காயங்கள் இருப்பதாகவும் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறியுள்ளார். பின்னர் மைதீன்பிவின் உடல் அவருடைய தோட்டத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இதனைதொடர்ந்து மைதீன்பீவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பீர்பாத்திமாக தென்காசி மாவட்ட எஸ்பியிடம் புகார் அளித்துள்ளார். இதனைதொடர்ந்து உடலை தோண்டி மறு உடற்கூறு ஆய்வு செய்ய மாவட்ட எஸ்பி உத்தரவிட்டநிலையில் சங்கரன்கோவில் வட்டாச்சியர், சேர்ந்தமரம் காவல்துறையினர் தலைமையில் நெல்லை நஞ்சியல்துறையை சேர்ந்த மருத்துவ நிபுணர்கள் பீர்மைதீன் உடல் புதைக்கப்பட்ட இடத்தில் உடலை தோண்டி மறு உடற்கூறு ஆய்வுக்காக எடுத்து சென்ற சம்பவம் சங்கரன்கோவில் பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!