தென்காசி மாவட்டத்தில் காலை உணவுத்திட்டம் தொடக்கவிழா

நடுவக்குறிச்சி மேஜர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தொடங்கி வைத்தார்.
Today Tenkasi News -பேரறிஞர் அண்ணா பிறந்த நாளான 15.09.2022 அன்று மதுரையில் காலை உணவுத் திட்டத்தை தமிழக முதல்வர் தொடங்கி வைத்ததை தொடர்ந்து தென்காசி மாவட்டத்தில் மேலநீலிதநல்லூர் வட்டாரத்தில் உள்ள நடுவக்குறிச்சி மேஜர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பேசுகையில், தமிழக மு.க.ஸ்டாலின் பள்ளி மாணவ மாணவியர்களின் கல்வி இடைநிற்றல் விகிதத்ததை குறைக்கும் பொருட்டு, கிராம புறங்களில் உள்ள பள்ளி மாணவ. மாணவியரும் தரமான கல்வியை பெறுவதை உறுதி செய்யும் வகையில் அவர்கள் மீது தனி கவனம் செலுத்தி இல்லம் தேடி கல்வி, நான் முதல்வன் புதுமை பெண் திட்டம் உள்ளிட்ட பல்வேறு கல்வி மேம்பாடு சார்ந்த திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்கள்.
அவற்றுள் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியரின் நலனை கருத்தில் கொண்டு தொடங்கப்பட்டுள்ள முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் மிகவும் முக்கியத்தும் வாய்ந்த திட்டமாக அமைந்துள்ளது. இத்திட்டத்தின் மூலம் பள்ளி மாணவ, மாணவியர் பசியின்றி பள்ளிக்கு வருவது உறுதி செய்யப்படும். மேலும், ஊட்டச்சத்து குறைவு, இரத்த சோகை குறைபாடுகளால் மாணவ, மாணவியர் பாதிக்கப்படாமல் இருக்கவும், பள்ளிக்கு அவர்களின் வருகையை அதிகரிக்கவும், வேலைக்கு செல்லும் தாய்மார்களின் பணிச்சுமையை குறைக்கவும் மிகவும் உறுதுணையாக இருக்கும்.
தென்காசி மாவட்டத்தில் இத்திட்டம் முதற்கட்டமாக குருவிகுளம் மற்றும் மேலநீலிதநல்லூர் வட்டாரங்களில் உள்ள 65 ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகளில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் 2 ஆயிரத்து 181 மாணவ, மாணவியர் பயனடைவர்.
காலை உணவு வழங்கும் திட்டத்தினை திறம்பட செயல்படுத்துவதற்கு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை, ஊரக வளர்ச்சி, தமிழ்நாடு மகளிர் மேம்பாடு நிறுவனம், பள்ளி கல்வி, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள், உணவு பாதுகாப்பு உள்ளிட்ட துறை அலுவலர்களை கொண்ட மாநில மற்றும் பள்ளி அளவிலான கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் தென்காசி மாவட்டத்தில் முன்னணி நிறுவனங்கள் மூலம் சமையலா்களுக்கு சமையல் பயிற்சி முறையாக வழங்கப்பட்டு, அவர்கள் இதற்கென உருவாக்கப்பட்டுள்ள சமையல் மையத்தில் தினசரி காலை 6 மணிக்கு முன்னதாக வருகை தந்து உணவு தயாரித்து பள்ளி தொடங்கும் முன்பு மாணவர்களுக்கு பரிமாறுவார்கள். திங்கட்கிழமை அரிசி உப்புமா காற்கறி சாம்பார், செவ்வாய்கிழமை ரவா காய்கறி கிச்சடி, புதன்கிழமை வெண்பொங்கல் காய்கறி சாம்பார், வியாழக்கிழமை கோதுமை ரவா உப்புமா காய்கறி சாம்பார், வெள்ளிக்கிழமை சேமியா காய்கறி கிச்சடி, ரவா கேசரி/ சேமியா கேசரி (சுழற்சி முறை)யில் வழங்கப்படும் என தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) குருநாதன்., வரவேற்புரை ஆற்றினார்கள், தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் தனுஷ், எம். குமார், சங்கரன்கோவில் சட்ட மன்ற உறுப்பினர் .ராஜா மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். திட்ட இயக்குநர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) சுரேஷ் நன்றியுரை ஆற்றினார்கள்.
நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் ராஜா தலைவர், சங்கரன்கோவில் ஒன்றிய குழுத் தலைவர் லாலா சங்கர பாண்டியன், மேலநீலிதநல்லூர் ஊராட்சி ஒன்றிய தலைவர் மாதவி, நடுவக்குறிச்சி மேஜர் ஊராட்சி மன்றத் தலைவர் முத்துப்பாண்டியன், முதன்மை கல்வி அலுவலர் கபீர், உதவித் திட்ட அலுவலர் சிவக்குமார் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் ஆசியர்கள், மாணவ மாணவியர்கள் மற்றும் பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu