எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்ற கொள்கைக்காக உருவானது ஐஜேகே கட்சி
தென்காசி மாவட்டம் திருவேங்கடத்தில் இந்திய ஜனநாயக கட்சி சார்பில் நடைபெற்ற நாடு இன நாய்கள் உரிமை மீட்கும் மாநாடு மற்றும் கண்காட்சியில் பங்கேற்ற ரவிபச்சமுத்து
அனைவருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்பதற்காக உருவானது தான் இந்திய ஜனநாயக கட்சி என்றார் அக்கட்சியின் அகில இந்தியத் தலைவர் ரவி பச்சமுத்து.
தென்காசி மாவட்டம் திருவேங்கடத்தில் நாட்டின நாய்கள் உரிமை மீட்கும் மாநாடு மற்றும் மாபெரும் கண்காட்சி இந்திய ஜனநாயக கட்சி சார்பில் நடைபெற்றது.இந்த நிகழ்ச்சிக்கு மாநில துணைப் பொதுச் செயலாளர் நெல்லை ஜீவா தலைமை வகித்தார்.இளைய வேந்தர் பேரவை மாநில தலைவர் ஆனந்த முருகன் முன்னிலை வைத்தார்.
இந்திய ஜனநாயக கட்சியின் அகில இந்திய தலைவர் ரவி பச்சை முத்து கலந்து கொண்டு வெற்றி பெற்ற நாட்டின நாய்கள் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டு தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து ரவிபச்சமுத்து பேசுகையில், மனிதன் தோன்றிய காலத்திலிருந்து நாம் மண்ணோடும் இயற்கையோடும் இணைந்து வாழ்ந்து வருகிறோம். ஒவ்வொரு இடங்களிலும் அங்குள்ள தட்பவெட்பங்களுக்கு ஏற்ப அதாவது குளிர் அதிகம் உள்ள பகுதிகளில் அதிக ரோமம், வெப்பம் அதிகம் உள்ள பகுதிகளில் ரோமம் இல்லாத ஜீவராசிகள் இருக்கும். இறைவன் இயற்கையிலேயே நமக்கு தேவையான அனைத்தையும் கொடுத்துள்ளான் அந்த இயற்கையை காப்பாற்ற வேண்டியது நமது கையில் தான் உள்ளது.
அந்த இயற்கை வளத்தை காப்பாற்ற வேண்டும் என்ற உணர்வு நமக்கு வர வேண்டும். ஆனால் தற்போது நாம் வெளிநாட்டுப் பொருள்கள், செல்ல பிராணிகள் மீது மோகம் அதிகரித்துள்ளது. அதன் விளைவாக ஒரு இனத்தை மற்றோரு இனத்தோடு கலப்பினம் செய்து செயற்கை முறையில் உருவாக்குவது தவறு. இப்படி ஒரு சூழ்நிலையில் இந்த இடத்தில் நம் பாரம்பரிய இனத்தை காப்பாற்ற இங்கு ஒரு சங்கம் உள்ளது. அதுவும் சிறப்பாக செயல்படுகிறது என்பது பெருமையாக உள்ளது.
நமது வரலாற்றை நாம் பாதுகாத்தாலே போதும் புதிதாக எதுவும் செய்ய வேண்டாம். நமது உரிமைகள், மண்ணின் பெருமைகள் பாதுகாக்கப்பட வேண்டும். ஆனால் நாம் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதால் நமது இனம் மறைந்து விடுகிறது. நமது இனத்தை காப்பாற்ற இளைஞர்கள் முன் வர வேண்டும்.
தற்போது இளைஞர்கள் சமூக வலைதளங்கள் மூலம் வெளிநாடு மோகங்களில் மூழ்கின்றனர். அங்குள்ள கலாசாரங்களை இங்கு கொண்டு வர முயற்சிக்கின்றனர். ஆனால் இங்கு பார்த்தால் இளைஞர்கள் அதிகம் உள்ளனர். வேறு கலாசாரம் வேண்டாம். எனது நாட்டு நாய் நாட்டு நாய் ஆகவே இருக்கட்டும் என்கின்ற உணர்வு இருந்தது அது போன்று கலாசாரம் பாதுகாக்கப்பட வேண்டும். பாரிவேந்தர் கல்விச்சாலை, மருத்துவமனைகள், மற்றும் எல்லா தொழிலிலும் நாம் கால் தடம் பதித்துள்ளோம். இதன் மூலம் மக்களுக்கு தான் கற்ற நல்ல விஷயங்கள், நல்ல அனுபவங்கள் மற்றும் மகிழ்ச்சியை திருப்பித் தர வேண்டும் என்று நினைத்தார். அதனால் உருவானது தான் இந்திய ஜனநாயக கட்சி.
தனிநபர் வருமானம், நாட்டில் உள்ள தங்கத்தின் கையிருப்பு, மற்றும் சிலவற்றை வைத்து ஒரு நாடு பணக்கார நாடு என அளவீடு செய்தார்கள். ஆனால் தற்போது இளைஞர்கள் அதிகம் உள்ள நாடு தான் பணக்கார நாடு என்று அளவில் செய்கிறார்கள் அதனால் தான் உலக நாடுகள் இந்தியா மற்றும் சீனாநாடுகளை பார்த்து பயம் கொள்கிறது காரணம் இங்கு அதிக அளவில் இளைஞர்கள் உள்ளார்கள். உலகத்தை ஒரு காலத்தில் தமிழன் ஆள்வான் என்ற கருத்து உள்ளது.
தற்போது உலகத்திற்கு எங்கு சென்று பார்த்தாலும் தமிழன் உள்ளான் உலகத்தை ஆள தொடங்கி விட்டான். கமலா ஹரிஸ் தொடங்கி ரிஷி சுந்தர் வரை தற்போது பிரதமராக உள்ளார். தமிழன் நம் நாட்டிற்கு வந்தால் நன்றாக இருக்கும் என்று பிற நாடுகள் சிந்திக்க ஆரம்பித்து விட்டார்கள். நம் நாட்டில் எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கிறது ஆனால் தகுதியான வேலை வாய்ப்பு இல்லை. வேலை வாய்ப்புகளை உருவாக்குவது, தொழிற்சாலைகளை உருவாக்குவது, கல்விக்கு தகுந்த வருமானத்தை உருவாக்குவது அரசின் எண்ணமாக இருக்க வேண்டும்.
அது போன்ற ஒரு அரசை உருவாக்கத்தான் பாரிவேந்தர் அரசியலுக்கு வந்தார். அதற்குத் தான் இந்திய ஜனநாயக கட்சி பாடுபட்டு வருகிறது. இந்த இடத்தில் இளைஞர்கள் பாரம்பரியத்தையும், பரம்பரையும், வரலாற்றையும் பாதுகாக்க உருவாகிறார்கள் என்பதை பெருமையாக உள்ளது அவர்களுக்கு வாழ்த்துகள். அவர்களுக்கு எப்போதும் இந்திய ஜனநாயக கட்சி உறுதுணையாக இருக்கும் என்று ரவிபச்சமுத்து தெரிவித்தார்.
இன் நிகழ்ச்சியில் மாநில மகளிர் அணி செயலாளர் இளவரசி, இளைஞர் அணி துரை, மாவட்ட துணைத் தலைவர் ஹரிஹரசுதன், மாவட்ட தொழிலாளர் அணி செயலாளர் வினோத், துணைச் செயலாளர் ரமேஷ் உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து இந்திய ஜனநாயக கட்சியினர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu