‘‘புகாரை வாங்க மாட்டேன்; என்னிடம் கொடுக்காதீங்க’’ இன்ஸ்பெக்டரின் வீடியோ வைரல்
கல்குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து மலையின் மீது குடியேற முடிவு செய்த கிராம மக்களிடம் காவல்துறையினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
சங்கரன்கோவில் அருகே கல்குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் மலையில் எறி போராட்டம் நடத்த முடிவு செய்தனர். அதனால் 300க்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டு, அந்த கிராமத்தை சேர்ந்த வழக்கறிஞர்கள் தலைமையில் கூடிய போது பேச்சுவார்த்தை நடத்த வந்த இன்ஸ்பெக்டர் மாதவன், ‘‘புகாரை நான் வாங்க மாட்டேன்; என்னிடம் கொடுக்காதீங்க’’ என நழுவிச் சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்டுத்தியுள்ளது.
சங்கரன்கோவில் அருகே உள்ளது அரியூர் மலை. இந்த மலையானது சிவகிரி தாலூகா அரியூர் பஞ்சாயத்திற்குபட்ட பகுதியில் 777ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த மலையில் மான், முள்ளம்பன்றி, முள் எலி, எறும்புத்திண்ணி, காட்டுப்பன்றி, மலைப்பாம்பு உள்ளிட்ட அரிய வகை விலங்குகள் வசித்து வருகின்றன. இந்த மாலையால் நான்கு குளங்களில் உள்ள ஐநூற்றுக்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் உள்ளிட்ட ஆயிரகணக்கான கால்நடைகளும் பலனடைந்து வந்தது.
தற்போது இந்த மலையில் தனிநபர் ஒருவர் கல்குவாரிக்கு அனுமதி வாங்கி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் விவசாய நிலங்களை குறைந்த விலைக்கு வாங்கி நூற்றுகணக்கான அடி கணக்கில் மண், பாறைகளை சட்டத்திற்கு புறம்பாக தோண்டி கனிம வளங்களை விற்பனை செய்து வருவதால் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டு பத்துக்கும் மேற்பட்ட கிராம மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு அருகில் உள்ள வீடுகள் விரிசல் ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர், கனிமவளத்துறை, காவல்துறை உள்ளிட்ட அனைத்து துறை சார்ந்த அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால், ஆத்திரமடைந்த கிராம மக்கள் மலையில் ஏறி போராட முடிவு செய்தனர்.
இதனையறிந்த காவல்துறையினர் சங்கரன்கோவில் டிஎஸ்பி சுதிர் தலைமையில் பல்வேறு இடங்களில் 200க்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். இதனையறிந்த இருமன்குளம் கிராமத்தை சேர்ந்த வழக்கறிஞர்கள் கிரமத்தில் உள்ள வயதான முதியவர்களை அழைத்து பேசி வந்தனர்.
அப்போது அங்கு வந்த இன்ஸ்பெக்டர் மாதவன் வழக்கறிஞர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். கல்குவாரியினால் ஏற்படும் விளைவுகள் குறித்து கிராம மக்கள் எடுத்து கூறினார்கள். அப்போது நாங்கள் மனு கொடுக்கிறோம் அதனை உங்களுடைய மேல் அதிகாரிகளுக்கு பரிந்துரை செய்யுங்கள் என்று கூற, அதற்கு செவி சாய்க்காத இன்ஸ்பெக்டர் மாதவன், ‘‘என்னிடம் புகார் அளிக்காதீர்கள்; நான் வாங்க மாட்டேன்’’ என நழுவி அந்த இடத்தை விட்டு சென்ற சம்பவம் வழக்கறிஞர்கள் மத்தியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுது.
இதைத்தொடர்ந்து மலையில் ஏறி போராட்டத்தில் ஈடுபட வழக்கறிஞர்கள் தலைமையில் சென்றனர். அவர்களை தடுத்த டிஎஸ்பி சுதிர் பேச்சுவார்த்தை நடத்தி நீங்கள் மனு என்னிடம் கொடுங்கள் நான் நடவடிக்கை எடுக்கிறேன் என கூறியதை தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் இன்ஸ்பெக்டர் மாதவன் புகார் பெற்றிருந்தால் பிரச்சனை உடனடியாக முடிந்துவிட்டிருக்கும். ஆனால் புகாரை வாங்காமல் என்னால் முடியாது என்று கூறிய இன்ஸ்பெக்டர் மாதவன் மீது தமிழக காவல்துறை தலைவர் உரிய நடவடிக்கை எடுத்து கல்குவாரியை நிறுத்தி கிராம மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என்பது கிராம மக்களின் கோரிக்கையாக உள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu