தண்ணீரில் மிதக்கும் அரசு மேல்நிலைப்பள்ளி: கண்டுகொள்ளாத அரசு அதிகாரிகள்

தண்ணீரில் மிதக்கும் அரசு மேல்நிலைப்பள்ளி: கண்டுகொள்ளாத அரசு அதிகாரிகள்
X

பள்ளியில் தேங்கியுள்ள மழைநீர்

நடுவக்குறிச்சி கிராம அரசு மேல்நிலைப்பள்ளியில் தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் பள்ளிக்கு விடுமுறை.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள நடுவக்குறிச்சி கிராமத்தில் 600க்கு மேற்பட்ட மாணவர்கள் படிக்கும் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது.

நள்ளிரவில் பெய்த கனமழையால் பள்ளி வாளகம் முழுவதும் தண்ணீர் சூழ்ந்தது. இதனால் இன்று காலை பள்ளிக்கு வந்த மாணவர்களை இன்று பள்ளி விடுமுறை என அறிவித்து ஆசிரியர்கள் திருப்பி அனுப்பினர்.

பள்ளியில் தண்ணீர் சூழ்ந்துள்ளது குறித்து உரிய அதிகாரிகளுக்கு தகவல் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. இதனால் நடுவக்குறிச்சி பஞ்சாயத்து தலைவர் ஏற்பாட்டில் பள்ளியை சுற்றி இருக்கும் நீரை அகற்றும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

மேலும் தமிழக அரசு போதிய நிதியை ஒதுக்கி பள்ளி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தேங்கியுள்ள நீரை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!