வாசுதேவநல்லூரில் இந்து முன்னணியினர் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்டம்

வாசுதேவநல்லூரில்  இந்து முன்னணியினர் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்டம்
X

வாசுதேவநல்லூரில் விநாயகர் சதுர்த்தியை கொண்டாடிய இந்து முன்னணியினர்.

வாசுதேவநல்லூரில் இந்து முன்னணி சார்பாக விநாயகர் சதுர்த்தி விழா மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது.

தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூரில் மந்தை விநாயகர் சதுர்த்தி வழிபாட்டு குழு, இந்து முன்னணி, பா.ஜ.க. சார்பில் 21ம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக நடைபெற்றது. இதில் அப்பகுதியை சேர்ந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

இந்நிகழ்ச்சியில் பாஜக மாவட்ட இளைஞரணி துணை தலைவர் சங்கரநாராயணன் தலைமை தாங்கினார். ஒன்றிய தலைவர் இசக்கி வாசு முன்னிலை வகித்தார். இந்து முன்னணி நகர தலைவர் ச.ராமச்சந்திரன், ஆலய பாதுகாப்பு இயக்க மாவட்ட செயலாளர் சரவணன், பாஜக IT&SM மாவட்ட துணை தலைவர் மகாலிங்கம் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்டனர்.

மேலும், கமிட்டி நிர்வாகிகள் வே.மாரியப்பன், காளிராஜ், சுப்பிரமணியன் வணிக வைசியர் நாட்டாண்மை, சொரிமுத்து, ஆறுமுகம், பரமசிவன்,C.குமார், திருமலை முருகன்,கடல்ராஜ், இசக்கி முனியசாமி,ராமசாமி, இசக்கிமுத்து, கரடிமுத்து, முருகன் மற்றும் பூசாரி சிவராமன் மற்றும் பொதுமக்களும், ஆன்மீக பெரியோர்களும் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!