சங்கரன்கோவிலில் விசைத்தறி தொழிலாளர்கள் கூலி உயர்வு கேட்டு ஆர்ப்பாட்டம்

சங்கரன்கோவிலில் விசைத்தறி தொழிலாளர்கள் கூலி உயர்வு கேட்டு ஆர்ப்பாட்டம்
X

சங்கரன் கோவிலில் கூலி உயர்வு கேட்டு விசைத்தறி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் விசைத்தறி தொழிலாளர்கள் கூலி உயர்வு கேட்டு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் திருவேங்கடம் சாலையில் உள்ள பாடாப்பிள்ளையர் கோவில் அருகே 10 சதவீத கூலி உயர்வு கேட்டும், நூல் விலை உயர்வை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தென்காசி மாவட்ட விசைத்தறி தொழிலாளர்கள் சங்கம் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் மாரியப்பன் தலைமை வகித்தார்.

மாவட்ட செயலாளர் வேல்முருகன் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் சங்க நிர்வாகிகள் ரத்தினவேலு, சுப்பிரமணியன், மாணிக்கம் உள்ளிட்ட பலர் கண்டன உரையாற்றினார்கள். ஆர்ப்பாட்டத்தின்போது மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான விசைத்தறி தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!