சங்கரன்கோவில் அருகே கன மழையால் கரை புரண்டு ஓடுகிறது காட்டாற்று வெள்ளம்

சங்கரன்கோவில் அருகே  கன மழையால் கரை புரண்டு ஓடுகிறது காட்டாற்று வெள்ளம்
X

சங்கரன்கோவில் பகுதியில் காட்டாற்று வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது.

சங்கரன்கோவில் அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த கன மழையால் கோட்டைமலை ஆற்றில் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள புளியங்குடி மேற்கு தொடர்ச்சி மலையில் விடிய விடிய கொட்டித் தீர்த்த கனமழையால் கோட்டை மலையில் உள்ள பல்வேறு ஆறுகளில் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. அதனால் அப்பகுதியில் உள்ள விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

விடிய, விடிய கொட்டித் தீர்த்த கனமழையால் அப்பகுதியில் உள்ள குளங்களுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது அதனால் விவசாயிகள் நெல் விதைகள் விதைக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!