சங்கரன்கோவில் அருகே முன்விரோதம் காரணமாக மூதாட்டி கல்லால் அடித்து கொலை

சங்கரன்கோவில் அருகே முன்விரோதம் காரணமாக மூதாட்டி கல்லால் அடித்து கொலை
X

கைது செய்யப்பட்ட ராஜ்குமார்.

சங்கரன்கோவில் அருகே முன்விரோதம் காரணமாக சின்னத்தாய் என்ற மூதாட்டியை கல்லால் அடித்து கொலை செய்தவரை போலீசார் கைது செய்தனர்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள சுப்பையாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சின்னத்தாய் என்ற மூதாட்டி. இவர் தனது வீட்டின் அருகே உள்ள குடிதண்ணீர் குழாயில் தண்ணீர் பிடிப்பதற்காக சென்ற போது அவரது உறவினரான ராஜ்குமார்(35) மூதாட்டியிடம் தண்ணீர் பிடிக்க கூடாது என்று தகராறில் ஈடுபட்டுள்ளார். அதனையும் மீறி தண்ணீர் பிடித்துள்ளார்.

அதனால் ஆத்திரமடைந்த ராஜ்குமார் மூதாட்டியை கீழே தள்ளிவிட்டு அருகில் இருந்த கல்லை எடுத்து சின்னத்தாயின் தலையில் போட்டுள்ளார். அதனால் இரத்த வெள்ளத்தில் மூதாட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தகவலறிந்த சேர்ந்தமரம் காவல்துறையினர் மூதாட்டியின் உடலை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் கொலை குற்றவாளியான ராஜ்குமாரை கைது செய்து விசாரணை மேற்கொண்ட போது நிலத்தகராறில் முன்விரோதம் காரணமாக சின்னத்தாயை கொலை செய்தாரா? இல்லை வேறு காரணத்திற்காக கொலை செய்தாராரா? என்ற கோணத்தில் சேர்ந்தமரம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!