சங்கரன்கோவிலில் கிணற்றில் விழுந்து மூதாட்டி தற்கொலை: தீயணைப்புத்துறையினர் உடல் மீட்பு

சங்கரன்கோவிலில் கிணற்றில் விழுந்து மூதாட்டி தற்கொலை: தீயணைப்புத்துறையினர் உடல் மீட்பு
X
சங்கரன்கோவிலில் கிணற்றில் விழுந்து 80 வயது மூதாட்டி தற்கொலை. உடலை தீயணைப்புத்துறையினர் மீட்டு காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

சங்கரன்கோவிலில் கிணற்றில் விழுந்து என்பது வயது மூதாட்டி தற்கொலை. உடலை தீயணைப்புத்துறையினர் மீட்டு காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் விஐபி நகர் அருகிலுள்ள தர்மராஜா என்பவரது கிணற்றில் ஒரு பெண் சடலமாக மிதப்பதாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. தகவலையடுத்து நிலைய அலுவலர் விஜயன் தலைமையில் குழுவினர் விரைந்து சென்று பார்த்தபோது குமரன் தெருவைச்சேர்ந்த மனநிலை பாதிக்கப்பட்ட பார்வதி (80) க/பெ பூவனம் என்பவர் சடலமாக தண்ணீரில் மிதந்தார்.

மேற்படி நபரை தீயணைப்புத்துறை பணியாளர்கள் துறை உபகரணங்கள் கொண்டு மீட்டு டவுன் காவல் உதவி ஆய்வாளர் ஜெயராஜ் வசம் மேல் நடவடிக்கைக்காக ஒப்படைத்தனர்.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!