சங்கரன்கோவிலில் போக்சோ சட்டத்தில் பட்டதாரி இளைஞர் கைது

சங்கரன்கோவிலில் போக்சோ சட்டத்தில் பட்டதாரி இளைஞர் கைது
X
சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக, சங்கரன்கோவிலில் போக்சோ சட்டத்தில் பட்டதாரி இளைஞர் கைது செய்யப்பட்டார்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள இராமநாதபுரத்தை சேர்ந்த் ராஜேந்திரன் மகன் சாமிராஜகுரு. இவர் சங்கரன்கோவில் பகுதியைச் சேர்ந்த 4ம் வகுப்பு படித்து வரும் பள்ளி மாணவி ஒருவரிடம் சில்மிஷம் செய்ததாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக, சிறுமியின் குடும்பத்தினர் கொடுத்த புகாரின் அடிப்படையில், சங்கரன்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து, சாமிராஜகுருவை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதனை தொடர்ந்து நீதிபதி சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!