சங்கரன்கோவில் அருகே வாகன விபத்தில் அரசு பள்ளி ஆசிரியர் உயிரிழப்பு

சங்கரன்கோவில் அருகே வாகன விபத்தில் அரசு பள்ளி ஆசிரியர் உயிரிழப்பு
X
சங்கரன்கோவில் அருகே வாகன விபத்தில் அரசு பள்ளி ஆசிரியர் ராமர்(36) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

சங்கரன்கோவில் அருகே வாகன விபத்தில் அரசு பள்ளி ஆசிரியர் ராமர்(36) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் உடலை கைப்பற்றி காவல்துறையினர் விசாரணை.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் முதல் திருவேங்கடம் செல்லும் சாலையில் பெருங்கோட்டூர் அருகே இருசக்கர வாகனமும் அரசுப் பேருந்தும் நேருக்கு நேர் மோதியதில் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்த ஏழாயிரம்பண்ணை சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியர் ராமர்(36) என்பவர் சம்பவ இடத்தில் பலியானார். விபத்து நடந்த மறு நிமிடமே அரசு பேருந்து ஓட்டுநர் தப்பியோடிவிட்டார்.

தகவலறிந்த திருவேங்கடம் போலீசார் உடலை கைப்பற்றி விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story