மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வாக்குபதிவு

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வாக்குபதிவு
X

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அரை மணி நேரம் வரிசையில் நின்று வாக்குப் பதிவு செய்தார்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே கலிங்கப்பட்டியில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வாக்குப் பதிவு செய்ய அங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளிக்கு வந்தார். 155 ஆம் எண் வாக்குச் சாவடிக்கு அவர் வந்த போது நீண்ட வரிசை இருந்தது. அங்கு சுமார் 50 க்கும் மேற்பட்டோர் காத்திருத்தனர். அவர்களுக்குப் பின்னால் வைகோ வரிசையில் நின்றார்.அவருடன் அவரது மகன் துரை வையாபுரி யும் வாக்களிக்க நின்றார்.இதையடுத்து அரை மணி நேரம் வரிசையில் காத்திருந்த அவரை 376 ஆவது வரிசை எண் சொல்லி தேர்தல் பணியாளர்கள் அழைத்ததும் அவர் வாக்களித்தார்.

Tags

Next Story