2 நாளாக எரியும் சங்கரன்கோவில் குப்பை: பொதுமக்கள் அவதி

2 நாளாக எரியும் சங்கரன்கோவில் குப்பை: பொதுமக்கள் அவதி
X
இரண்டாவது நாளாக சங்கரன்கோவில் நகராட்சி குப்பை கிடங்கில் எரியும் தீயை அணைக்கும் தீயணைப்புத்துறையினர்.

இரண்டாவது நாளாக சங்கரன்கோவில் நகராட்சி குப்பை கிடங்கில் எரியும் தீயை அணைக்கும் தீயணைப்புத்துறையினர். குடியிருப்பு முழுவதும் புகைமண்டலம் சூழ்ந்ததால் பொதுமக்கள் அவதி.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கானது, புதிய பேருந்துநிலையத்தில் அமைக்கப்பட்டு அப்பகுதியை சுற்றி ஆயிரகணக்கான குடியிருப்புகளில் பல்லாயிரகணக்கான மக்கள் வசதித்து வருகின்றனர். நகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கில் இரண்டாவது நாளாக பற்றி எரியும் தீயினால் அப்பகுதி முழுவதும் புகைமண்டலமாக காட்சியளிக்கிறது. அதனால் குடியிருப்பு வாசிகள் அனைவருக்கும் மூச்சுதிணறல் ஏற்பட வாய்ப்புள்ளதாக பொதுமக்கள் குற்றசாட்டுகின்றனர்.

இரண்டாவது நாளாக குப்பை கிடங்கில் எரியும் தீயை அணைக்கும் பணியில் தீயணைப்புத்துறையினர் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக போராடி வருகின்றனர். கடந்த ஒரு மாதத்தில் மட்டும் நான்கு முறை தொடர்ந்து நகராட்சி குப்பை கிடங்கில் மர்ம நபர்கள் தீவைத்து செல்வது தொடர்கதையாகி வருகிறது. குப்பை கிடங்கில் தீ வைக்கும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாகும்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!