விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த நபர் கைது செய்து சிறையில் அடைப்பு

விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த நபர் கைது செய்து சிறையில் அடைப்பு
X
கரிவலம்வந்தநல்லூர் அருகே, விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த நபரை கைது செய்து, போலீசார் சிறையில் அடைத்தனர்.

தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் உத்தரவின் பேரில், மாவட்டம் முழுவதும் மது,புகையிலை மற்றும் கஞ்சா போன்றவற்றை விற்பனை செய்வதை தடுக்கும் பொருட்டு, தனிப்படை அமைத்து காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், கரிவலம்வந்தநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், சார்பு ஆய்வாளர் சங்கர நாராயணன் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது, அங்கு சட்டவிரோதமாக விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த, தூத்துக்குடி இனாம் மணியாச்சியைச் சேர்ந்த முருகேசன் என்பவரின் மகன் மகேஷ் குமார்(31) மீது வழக்குப்பதிவு செய்து, கைது செய்து சிறையில் அடைத்தார். அவரிடம் இருந்து, விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த கஞ்சா மற்றும் அதற்கு பயன்படுத்திய இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!