சுதந்திர போராட்ட வீரர் அழகுமுத்துகோன் பிறந்த நாள் விழாவுக்கு வேன், இரு சக்கர வாகனங்களில் செல்ல தடை

சுதந்திர போராட்ட வீரர் அழகுமுத்துகோன் பிறந்த நாள் விழாவுக்கு வேன், இரு சக்கர வாகனங்களில் செல்ல தடை
X
கொரோனா ஊரடங்கு காரணமாக சங்கரன்கோவிலில் சுதந்திர போராட்ட வீரர் அழகுமுத்துக்கோன் ஜெயந்தி விழா கொண்டாடுவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது தொடர்பாக காவல்துறை - யாதவ சமுதாய அமைப்பு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது

சங்கரன்கோவில் சுற்றுவட்டார பகுதியில் இருந்து சுதந்திர போராட்ட வீரர் அழகுமுத்துகோன் பிறந்த நாள் விழாவில் வேன் மற்றும் இரு சக்கர வாகனங்களில் கூட்டமாக செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது

தென்காசி மாவட்டம் சங்கரன் கோவிலில் உள்ள தனியார் திருமண மஹாலில் சுதந்திர போராட்ட வீரர் அழகுமுத்து கோன் 309 வது ஜெயந்தி விழா தொடர்பான யாதவ சமுதாய நிர்வாகிகள் காவல் துறையினர் ஆலோசனை கூட்டம் டி எஸ் பி ஜாகிர் உசேன் தலைமையில் நடைபெற்றது.

இந்த ஆலோசனை கூட்டத்தில் கொரோனா நோய் பரவல் காரணமாக 144 தடை உத்தரவு அமலில் உள்ளதால் சங்கரன் கோவில் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம பகுதிகளில் இருந்து யாரும் தூத்துக்குடி மாவட்டம், கட்டாரகுளத்திற்கு கார் வேனில் செல்லவோ எந்தவித கூட்டம் கூட்டவோ அனுமதி கிடையாது எனவே காவல் துறையினர்க்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென காவல்துறை சார்பில் வலியுறுத்தப்பட்டது.

Tags

Next Story
ai solutions for small business