சங்கரன்கோவிலில் இலவச கண் சிகிச்சை முகாம்: பரிசாேதனை செய்தவர்களுக்கு பரிசுகள்

சங்கரன்கோவிலில் இலவச கண் சிகிச்சை முகாம்: பரிசாேதனை செய்தவர்களுக்கு பரிசுகள்
X

சங்கரன்கோவிலில் நடைபெற்ற இலவச கண் சிகிச்சை முகாமில் பரிசோதனை செய்து கொண்டவர்களுக்கு சாரதிராம் அறக்கட்டளை சார்பில் பரிசுப்பொருட்கள வழங்கப்பட்டன.

சங்கரன்கோவிலில் நடைபெற்ற இலவச கண் சிகிச்சை முகாமில் பரிசோதனை செய்து கொண்ட அணைவருக்கும் பரிசுப்பொருட்கள வழங்கப்பட்டன.

சங்கரன்கோவிலில் நடைபெற்ற இலவச கண் சிகிச்சை முகாமில் பரிசோதனை செய்து கொண்ட அனைவருக்கும் சாரதிராம் அறக்கட்டளை சார்பில் பரிசுப்பொருட்கள வழங்கப்பட்டன.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி, சாரதிராம் அறக்கட்டளை, நெல்லை அகர்வால் கண் மருத்துவமனை ஆகியோர் இணைந்து நடத்தும் இலவச கண் சிகிச்சை முகாம் சாரதிராம் அறக்கட்டளைக்கு சொந்தமான வனிக வளாகத்தில் நடைபெற்றது. இதில் பல்வேறு விதமான கண் சம்பந்தமான நோய்களுக்கு இலவச பரிசோதனை மற்றும் மருந்து பொருட்கள். கண்ணாடிகள் வழங்கப்பட்டது அதனால் ஏரளமான ஆண்கள், பெண்கள் வயதானோர் கலந்து கொண்டனர்.

இதில் கலந்து கொண்டவர்களுக்கு குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு முதல் பரிசு கிரைண்டர், இரண்டாம் பரிசு மிக்சி, மூன்றாம் பரிசு இ-ஸ்டவ் உட்பட கண் பரிசோதனையில் கலந்து கொண்ட அனைவருக்கும் ஆறுதல் பரிசுகள் அனைத்தையும் சாரதிராம் அறக்கட்டளையின் நிறுவனர் பிஜிபி.ராமநாதன் வழங்கினார். இதில் தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி மேலாளர், ஊழியர்கள், அகர்வால் கண் மருத்துவமனையின் மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்..

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்