கரிவலம் வந்த நல்லூர் அருகே தனியார் மில் வேன் கவிழ்ந்து 4 பேர் காயம்
கரிவலம் வந்த நல்லூர் அருகே தனியார் மில் வேன் கவிழ்ந்து 4 பேர் காயம்
தென்காசி மாவட்டம் கரிவலம்வந்தநல்லூர் அருகே உள்ள லெட்சுமியாபுரம், மரத்தோணி, கீழவயலி, சென்னிகுளம், சுப்பிரமணியபுரம் ஆகிய கிராமங்களை சேர்ந்தவர்கள் விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே உள்ள முறம்பில் அமைந்துள்ள தனியார் மில்லில் வேலை பார்த்து வந்தனர். அவர்கள் அனைவரும் வேலைக்காக வேனில் நேற்று மதியம் சென்றனர்.
வேனில் லெட்சுமியாபுரத்தில் இருந்து கரிவலம்வந்தநல்லூர் சென்று கொண்டிருந்தனர். வேனை சின்ன ஒப்பனையாள்புரத்தை முனியாண்டி மகன் மாரியப்பன் (40) என்பவர் ஒட்டினார். அப்போது லெட்சுமியாபுரத்தை சீனி மகன் ராமர் (58) என்பவர் ஒட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதி அருகில் உள்ள ஒடையில் கவிழ்ந்தது. ராமர், மரத்தோணி கிராமத்தை சேர்ந்த வேலுச்சாமி மனைவி முனியம்மாள்(46), லெட்சுமியாபுரத்தை குருசாமி மகள் மாலதி (22) உள்பட 4 பேர் பலத்த காயமடைந்தனர்.
மேலும் வேனில் இருந்த 20-க்கும் மேற்பட்ட பெண்கள் லேசான காயமடைந்தனர். படுகாயமடைந்த ராமர், முனியம்மாள், மாலதி ஆகியோர் பாளை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். வேன் கவிழ்ந்த ஒடையில் மழையால் பெய்த தண்ணீர் சிறிதளவே இருந்ததால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. விபத்து குறித்து கரிவலம்வந்தநல்லூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu