கோட்டை மலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு: மழைநீரில் மூழ்கி நெற்பயிர்கள் சேதம்

கோட்டை மலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு: மழைநீரில் மூழ்கி நெற்பயிர்கள் சேதம்
X

சங்கரன்கோவில் அருகே உள்ள கோட்டை மலை ஆற்றில் வெள்ளப்பெருக்கால் கரைகள் உடைந்து சேதமாகியுள்ளன.

சங்கரன்கோவில் அருகே கோட்டை மலை ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு. விவசாய நிலங்களுக்குள் புகுந்த மழைநீரால் நெற்பயிர்கள் சேதம்.

சங்கரன்கோவில் அருகே உள்ள கோட்டை மலை ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு விவசாய நிலங்களுக்குள் புகுந்த மழைநீர் நூற்றுக்கும் மேற்பட்ட மரங்கள் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டன. நெற்பயிர்கள் கடும் சேதம்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள கோட்டை மலை ஆற்றில் கடந்த ஒரு வார காலத்திற்கு மேலாக பெய்துவரும் கன மழை காரணமாக நவாச்சோலை அருகே உள்ள ஓடையில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வருகிறது. இதனால் அருகிலுள்ள விவசாய நிலங்களுக்குள் வெள்ள நீர் புகுந்து 20க்கும் மேற்பட்ட தென்னை, பனை, வேம்பு, தேக்கு உள்ளிட்ட மரங்கள் வேரோடு சாய்ந்து ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டன.

மேலும் அங்கிருந்த வேம்பு, தேக்கு, உள்ளிட்ட மரங்களை அழித்து விவசாய நிலங்களுக்குள் புகுந்து வெள்ள நீர் காரணமாக நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதம். இதனால் விவசாயிகள் பெரும் துயரத்திற்கு உள்ளாகியுள்ளனர் சம்பவ இடத்தில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!