சங்கரன்கோவில் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு இந்து முன்னணியினர் நூதன போராட்டம்

சங்கரன்கோவில் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு  இந்து முன்னணியினர் நூதன போராட்டம்
X

சங்கரன்கோவில் சங்கர நாராயணர் திருக்கோயில் முன்பு தடுப்புகள் அமைக்கப்பட்டு இருப்பதை கண்டித்து இந்து முன்னணியினர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சங்கரன்கோவில் சங்கரநாராயணர் சுவாமி திருக்கோவிலை திறக்க வலியுறுத்தி இந்து முண்ணனியினர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு காளி வேடம் அணிந்து மாவிளக்கு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சங்கரன்கோவில் சங்கர நாராயணர் திருக்கோயில் முன்பு தடுப்புகள் அமைக்கப்பட்டு இருப்பதை கண்டித்து இந்து முன்னணியினர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு மாவிளக்கு ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி திருக்கோயில் பொதுமக்கள், பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய எட்டாம் தேதி வரை மாவட்ட நிர்வாகம் அனுமதி இல்லை என தெரிவித்திருந்தது. இந்நிலையில் பக்தர்கள் கோவில் நுழைவு வாயிலை நெருங்காத வகையில் தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளது.

இதனை கண்டித்து இந்து முன்னணியினர் இன்று சங்கரன்கோவில் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவிளக்கு எடுத்து நூதன முறையில் போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் ஈடுபட்ட 20 க்கும் மேற்பட்ட இந்து முன்னணியினரை காவல்துறையினர் கைது செய்தனர்.

Tags

Next Story
அடுத்த தலைமுறைக்கு  மருத்துவத்தை கொண்டு செல்லும் Google AI for Healthcare