வாகன விபத்தில் முன்னாள் பஞ்., தலைவர் உயிரிழப்பு: உறவினர்கள் போராட்டம்

வாகன விபத்தில் முன்னாள் பஞ்., தலைவர் உயிரிழப்பு: உறவினர்கள் போராட்டம்
X

வாகன விபத்தில் இறந்த முன்னாள் திமுக பஞ்சாயத்து தலைவர் உறவினர்களிடம் எம்எல்ஏ ராஜா பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து உடலை பெற்றுக் கொண்டனர்.

சங்கரன்கோவில் அருகே வாகன விபத்தில் முன்னாள் திமுக பஞ்சாயத்து தலைவர் மரணத்தில் மர்மம் இருப்பதாக உறவினர்கள் போராட்டம்.

சங்கரன்கோவில் அருகே வாகன விபத்தில் முன்னாள் திமுக பஞ்சாயத்து தலைவர் மரணத்தில் மர்மம் இருப்பதாக உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சட்டமன்ற உறுப்பினர் பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து உடலை பெற்றுக் கொண்டனர்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள பெருங்கோட்டூர் கிராமத்தைச் சேர்ந்த முன்னாள் திமுக பஞ்சாயத்து தலைவரும், திமுக கிளைச் செயலாளருமான காளைபாண்டியன் நேற்றுமுன்தினம் வாகன விபத்தில் மரணம் அடைந்தார். அவருடைய மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறி அவரது உறவினர்கள் 300க்கும் மேற்பட்டோர் உடலை வாங்க மறுத்து சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்..

இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த திமுக சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அதில் காளைபாண்டியன் மரணம் தொடர்பாக உரிய விசாரணை செய்து தங்கள் குடும்பத்திற்கு தேவையான நிவாரணம் பெற்றுத் தர நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து காளைபாண்டியன் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் அவருடைய உடல் உறவினர்களிடம் சட்டமன்ற உறுப்பினர் ராஜா ஒப்படைத்தார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!