மணிமுத்தாறு அருகே வனத்துறை சுற்றுலா வாகனம், அரசு பேருந்து நேருக்கு நேர் மோதல்

மணிமுத்தாறு அருகே வனத்துறை சுற்றுலா வாகனம், அரசு பேருந்து நேருக்கு நேர் மோதல்
X

மணிமுத்தாறு அருகே அரசு பஸ் மாேதியதில் சேதமடைந்த வனத்துறை சுற்றுலா வாகனம்.

மணிமுத்தாறு - மாஞ்சோலை சாலையில் வனத்துறை சுற்றுலா வாகனம், அரசு பேருந்து நேருக்கு நேர் மோதல்.

நெல்லை மாவட்டம் அம்பை அருகே மேற்குதொடர்ச்சி மலையில் ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் மாஞ்சோலை அமைந்துள்ளது. இங்கு சுற்றுலா பயணிகள் சென்றுவர வனத்துறை சார்பாக 2 சுற்றுலா வாகனங்களும், மாஞ்சோலையில் வசிக்கும் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் பயன்பாட்டிற்காக அரசு பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.

இந்த நிலையில் நேற்று மணிமுத்தாறு சோதனைச்சாவடியில் இருந்து மாஞ்சோலை நோக்கி வனத்துறையினரின் சுற்றுலா வாகனம் சென்று கொண்டு இருந்தது. அப்போது மாஞ்சோலையில் இருந்து பாபநாசம் நோக்கி அரசு பேருந்தும் வந்துள்ளது.

மணிமுத்தாறு சோதனை சாவடியில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டருக்குள் இரு வாகனங்களும் எதிர்பாராத விதமாக நேருக்கு நேராக மோதிக்கொண்டன. இதில் அதிர்ஷ்டவசமாக இரு வாகனங்களிலும் சென்றவர்கள் எவ்வித காயமும் இன்றி உயிர் தப்பினர்.

Tags

Next Story
மக்களே உஷார் ....! மழைக்காலத்துல பல நோய்கள் வருதாம் !... அத எதிர்கொள்ள உங்களுக்காக சில டிப்ஸ்....