வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட தரைப்பாலம்: கிராம மக்கள் அவதி

வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட தரைப்பாலம்: கிராம மக்கள் அவதி
X

ஒப்பனையால்புரம் கிராமத்தில் உள்ள தற்காலிக தரைப்பாலம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது.

சங்கரன்கோவில் அருகே ஒப்பனையால்புரம் கிராமத்தில் தற்காலிக தரைப்பாலம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. பொதுமக்கள் அவதி.

சங்கரன்கோவில் அருகே ஒப்பனையால்புரம் கிராமத்தில் உள்ள தற்காலிக தரைப்பாலம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. பொதுமக்கள் அவதி.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள ஒப்பனையால்புரம் கிராமத்தின் அருகே மேம்பாலம் கட்டும் பணிகள் தொடங்கப்பட்டு மூன்று ஆண்டுகள் ஆகியும் கட்டுமானப் பணிகள் முடிவடையாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளன எனவே பொதுமக்கள் தற்காலிக பாலம் அமைத்து அதன் வழியாக தங்கள் ஊர்களுக்கு சென்று வருகின்றனர்.

இந்நிலையில் நேற்றிரவு முழுவதும் பெய்த கன மழையினால் இந்த தற்காலிக தரைப்பாலமானது வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. இதனால் இவ்வழியாக பனையூர் ஒப்பனையால்புரம், முகலிங்க புரம், நெல்கட்டும்செவல், பட்டகுறிச்சி மற்றும் அதனை சுற்றியுள்ள 15 கிராமங்களுக்கு செல்ல முடியாமல் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.

எனவே புதிய பாலத்தை விரைந்து கட்டி முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

Tags

Next Story
இன்ஸ்டாகிராம் முடக்கம் !!! பயனர்கள் அதிர்ச்சி !! அதிகரிக்கின்றது புகார்கள் !!! | why does instagram hang up by itself