சங்கரன்கோவில் அருகே சாலை விபத்தில் முதல் நிலைக் காவலர் உயிரிழப்பு

சங்கரன்கோவில் அருகே சாலை விபத்தில் முதல் நிலைக் காவலர் உயிரிழப்பு
X

சங்கரன்கோவில் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி உயிரிழந்த முதல் நிலைக் காவலர் பாலசுப்பிரமணியன்.

சங்கரன்கோவில் அருகே சாலை விபத்தில் முதல் நிலைக் காவலர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சங்கரன்கோவில் அருகே வடக்குபணவடலிசத்திரம் பகுதியைச் சேர்ந்த வெள்ளைப் பாண்டி என்பவரது மகன் பாலசுப்ரமணியம்( 35). அய்யாபுரம் காவல் நிலையத்தில் முதல் நிலை காவலராக பணியாற்றி வருக்கிறார்.

ஐயாபுரம் காவல் நிலையத்திலிருந்து சங்கரன்கோவிலில் உள்ள காவலர் குடியிருப்பில் இருக்கும் அவரது வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். திருநெல்வேலி சாலையில் சின்ன கோவிலாங்குளம் அருகே சென்று கொண்டிருக்கும் போது அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்துக்கொள்ளானது. இதில் படுகாயம் அடைந்த பாலசுப்பிரமணியம் 108 அவசர வாகனம் மூலம் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்குஅனுப்பி வைக்கப்பட்டார். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் பாலசுப்பிரமணியம் இறந்ததாக தெரிவித்தனர்.

பாலசுப்பிரமணியம் அவரது மனைவி பெரிய தாய் இருவருமே காவல்துறையில் பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

பணியில் இருக்கும் காவலர் ஒருவர் வாகன விபத்தில் உயிரிழந்திருப்பது சங்கரன்கோவில் காவல்துறையினர் மத்தியில் பெருத்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!