சங்கரன்கோவில் அருகே கிணற்றில் விழுந்த மானை மீட்ட தீயணைப்புத் துறையினர்

சங்கரன்கோவில் அருகே கிணற்றில் விழுந்த மானை  மீட்ட தீயணைப்புத் துறையினர்
X

சங்கரன்கோவில் அருகே கிணற்றில் விழுந்த மானை தீயணைப்புத் துறையினர் பத்திரமாக மீட்டு வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.

சங்கரன்கோவில் அருகே கிணற்றில் விழுந்த மானை தீயணைப்புத் துறையினர் பத்திரமாக மீட்டு வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.

தென்காசி மாவட்டம் கரிவலம்வந்தநல்லூர் அருகே உள்ள சோலைசேரியில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் இருந்து குடிநீருக்காக ராஜகுரு என்பவருக்குச் சொந்தமான கிணற்றில் மான் தவறி விழுந்துள்ளது.

இதனை கண்ட கிணற்றின் உரிமையாளர் சங்கரன்கோவில் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார். விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் நீண்ட நேரமாகப் போராடி கிணற்றில் இருந்த மானை பத்திரமாக மீட்டனர்.

இதனை அடுத்து சிவகிரி வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்து வரவழைக்கப்பட்டு அவர்களிடம் ஒப்படைத்தனர்.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!