சங்கரன்கோவிலில் வீட்டினுள் பதுங்கியிருந்த நல்ல பாம்பை மீட்ட தீயணைப்பு துறையினர்

சங்கரன்கோவிலில் வீட்டினுள் பதுங்கியிருந்த  நல்ல பாம்பை மீட்ட  தீயணைப்பு துறையினர்
X

சங்கரன்கோவிலில் ஒரு வீட்டில் பதுங்கியிருந்த பாம்பை பிடித்த தீயணைப்புத்துறையினர்

சங்கரன்கோவிலில் வீட்டினுள் பதுங்கியிருந்த 3 அடி நீளமுள்ள நல்ல பாம்பை தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டனர்

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் ரயில்வே பீடர் ரோடு சுப்பையா பாண்டியன் என்பவரது வீட்டில் பாம்பு பதுங்கியிருப்பதாக தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நிலைய அலுவலர் விஜயன் தலைமையில் விரைந்து சென்று பார்த்தபோது வீட்டு உபயோகப் பொருட்கள் வைத்திருக்கக்கூடிய இடத்தில் சுமார் 3 அடி நல்லபாம்பு இருந்தது தெரியவந்தது. இதையடுத்து பாம்பு பிடிக்கும் உபகரணங்கள் மூலம் பாம்பை உயிருடன் பிடித்து காட்டுப்பகுதிக்கு கொண்டு விடப்பட்டது.

Tags

Next Story
உங்கள் வணிக அறிவை மெருகேற்றும் புதிய ஆயுதம் – AI Course -  இதோ உங்களுக்காக!