சங்கரன்கோவிலில் தீயணைப்புத்துறையினர் பேரிடர் கால மீட்பு ஒத்திகை

சங்கரன்கோவிலில் தீயணைப்புத்துறையினர் பேரிடர் கால மீட்பு ஒத்திகை
X

தீயணைப்புத்துறையினர் சார்பில் உசிலங்குளம் கிராமத்தில் பள்ளி குழந்தைகள், பொதுமக்களிடையே விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினர்.

மழை காலங்களில் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து பாதுகாத்து காெள்வது குறித்து தீயணைப்புத்துறையினர் ஒத்திகை நிகழ்ச்சி.

மழை காலங்களில் இயற்கை சீற்றங்களால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்துகொள்ளும் ஒத்திகை நிகழ்ச்சி சங்கரன்கோவில் தீயணைப்புத்துறையினர் சார்பில் நடத்தப்பட்டது.

தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருவதால் புயல், மழை, வெள்ளம் உட்பட இயற்கை சீற்றங்களால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து பொதுமக்கள் தங்களை தற்கொத்து கொள்ள எந்த வகையான முறைகளை கையாள வேண்டும் என்று தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் தீயணைப்புத்துறையினர் சார்பில் உசிலங்குளம் கிராமத்தில் பள்ளி குழந்தைகள், பொதுமக்களிடையே விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினர். இதில் வெள்ளம் தண்ணீரில் மூழ்கிய நபரை எப்படி காப்பாற்றுவது என்று கிராமத்தில் உள்ள குளத்தில் தீயணைப்பு வீரர்கள் செய்முறை விளக்கங்களுடன் செய்து காண்பித்தனர்.

சங்கரன்கோவில் பகுதிகளில் ஒவ்வொரு காலகட்டத்திலும் மழை, வெள்ளம், ஆகியவற்றில் இருந்து தன்னுடைய உடைமைகளை எவ்வாறு காப்பாற்றி கொள்வது என்று செயல்முறை விளக்கங்களோடு காண்பித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. எனவே பொதுமக்கள் எந்தவித அவசர தேவைக்கும் தீயணைப்புத்துறையின் இலவச தொலைபேசி எண் 100, 101, 112ஆகிய நம்பர்களை பயன்படுத்தி தீயணைப்புத்துறையின் சேவையை பயன்படுத்தி கொள்ள அன்புடன் கேட்டு கொள்கிறேன் என சங்கரன்கோவில் தீயணைப்புத்துறை நிலைய அலுவலர் விஜயன் தெரிவித்தார்.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil