சங்கரன்கோவில் ரயில்நிலையம் எதிரே தீவிபத்து;. குப்பைகள் எரிந்து புகைமூட்டம்

சங்கரன்கோவில் ரயில்நிலையம் எதிரே தீவிபத்து;. குப்பைகள் எரிந்து புகைமூட்டம்
X

தீப்பற்றி எரியும் கழிவுகள்.

சங்கரன்கோவில் ரயில்நிலையம் எதிரே ஏற்பட்ட தீவிபத்தை தீயணைப்புத்துறையினர் விரைந்து சென்று அணைத்தனர்.

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் ரயில் நிலையம் எதிரில் உள்ள குடியிருப்புப் பகுதி அருகே தீவிபத்து ஏற்பட்டது. புதிதாக வீடு கட்டுவதற்கு சீர் செய்யப்பட்ட குப்பைகளை ஒரே இடத்தில் குவித்திருந்ததால் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் தீப்பற்றி புகைமூட்டமாக காணப்பட்டது.

இதனால் அருகிலிருந்த குடியிருப்புவாசிகள் உடனடியாக சங்கரன்கோயில் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்ததையடுத்து விரைந்து வந்த தீயணைப்பு படை வீரர்கள் அருகில் உள்ள குடியிருப்பு பகுதியில் தீ பரவாதவாறு தடுத்து தண்ணீரை கொண்டு அணைத்தனர்.

சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு முழுவதுமாக தீயை அணைத்ததால் அப்பகுதி குடியிருப்புவாசிகள் நிம்மதி அடைந்தனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!