சங்கரன்கோவில் அருகே மாற்றுத்திறனாளி பெண்ணை மீட்ட தீயணைப்பு துறையினர்

சங்கரன்கோவில் அருகே மாற்றுத்திறனாளி பெண்ணை மீட்ட தீயணைப்பு துறையினர்
X

தண்ணீர் சூழ்ந்த வீட்டிலிருந்து மாற்றுத்திறனாளி பெண்ணை தீயணைப்புத் துறையினர் மீட்டனர்.

சங்கரன்கோவில் அருகே வெள்ளத்தில் சிக்கிய மாற்றுத்திறனாளி பெண்ணை தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டு கரை சேர்த்தனர்.

சங்கரன்கோவில் அருகே உள்ள ஆராய்ச்சி பட்டி கிராமத்தில் வீட்டை சுற்றி மழை நீர் புகுந்ததால் வெளியேற முடியாமல் சிக்கிக்கொண்ட மாற்றுத்திறனாளி பெண்ணை துரிதமாக செயல்பட்டு தீயணைப்பு துறையினர் மீட்டனர்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருவேங்கடம் தாலுகா குருவிகுளம் ஒன்றியம் ஆராய்ச்சிபட்டி கிராமத்தில் மாற்றுத்திறனாளி பெண்ணான துரைச்சி (வயது42 )என்பவரின் வீட்டின் நான்கு பக்கமும் மழை நீரானது சூழ்ந்து காணப்பட்டது. இதனால் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் தவித்த மாற்றுத் திறனாளி பெண் சங்கரன்கோவில் சட்டமன்ற அலுவலக உதவி எண்ணை தொடர்பு கொண்டு பாதுகாப்பு கோரினார்.

இதுபற்றி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் சார்பில் சங்கரன்கோவில் தீயணைப்பு மீட்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அங்கு விரைந்த தீயணைப்பு மீட்பு படையினர் வெள்ளத்திலிருந்து மாற்றுத்திறனாளி பெண்ணை குண்டு கட்டாக தூக்கி வெளியே கொண்டு வந்து கிராம அலுவலர்கள் வசம் ஒப்படைத்தனர்.

பின்னர் அவர் கிராம அலுவலக பாதுகாப்பு மையத்தில் தங்க வைக்கப்பட்டார். மேலும் அவர் பயன்படுத்திய இருசக்கர வாகனமும் பத்திரமாக மீட்கப்பட்டது. மேலும் தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் துரிதமாக செயல்பட்டு மாற்றுத்திறனாளி பெண்ணை பத்திரமாக மீட்டதால் அப்பகுதி மக்கள் தீயணைப்பு மீட்பு படையினரை வெகுவாக பாராட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
ai in future agriculture